Latest Updates
-
புடலங்காயும், தயிரும் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
Hair Care: ஈரமான தலைமுடியுடன் தூக்குவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
உங்க ராசியை சொல்லுங்க.. உங்களோட ரகசிய குணத்தை சொல்றோம்.. -
வாழைப்பழம் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாதா? பால் குடித்தால் சளி பிடிக்குமா? நம்பிக்கைகளும்.. உண்மையும்.. -
இந்த 4 ராசி சிங்கப் பெண்களை யாராலும் கண்ட்ரோல் பண்ண முடியாதாம் - மகாராணியாக வாழ பிறந்தவர்களாம் இவங்க -
கேஸ் அடுப்பு ஆரஞ்சு நிறத்தில் எரிவதற்கு காரணம் என்ன தெரியுமா? அப்படி எரிஞ்சா என்ன பண்ணனும் தெரியுமா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் டிசம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
இந்தியாவில் உருவான முதல் கம்பெனி எது தெரியுமா? இன்று அந்த கம்பெனியின் மதிப்பு 60,000 கோடியாம் -
1 பீர்க்கங்காயும், 4 முட்டையும் இருந்தா.. இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
காளானும், உருளைக்கிழங்கும் இருந்தா இந்த மாதிரி தொக்கு செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
லன்ச்பாக்ஸிற்கு ஒருடைம் மசாலா தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க..
Lunchbox Special Masala Coconut Rice Recipe In Tamil: காலையில் உங்கள் பசங்களுக்கு டிபன் பாக்ஸிற்கு என்ன செய்து கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? பெரும்பாலும் நீங்கள் வெரைட்டி ரைஸ் தான் செய்து கொடுப்பீர்களா? அதுவும் உங்கள் பிள்ளைகளுக்கு தேங்காய் சாதம் என்றால் ரொம்ப பிடிக்குமா? எப்போதும் ஒரே சுவையில் தான் தேங்காய் சாதம் செய்து கொடுப்பீர்களா? அப்படியானால் ஒருமுறை மசாலா தேங்காய் சாதம் செய்து கொடுங்கள்.

இந்த தேங்காய் சாதம் வழக்கமாக செய்யும் தேங்காய் சாதத்தின் சுவையில் இருந்து மாறுபட்டிருக்கும். ஆனால் நன்கு காரசாரமாக, பிள்ளைகள் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையில் இருக்கும். முக்கியமாக இந்த தேங்காய் சாதம் செய்வதற்கு மிகவும் சுலபம். வேலைக்கு செல்பவர்களும், பேச்சுலர்களும் இதுப்போன்று எளிமையான வெரைட்டி ரைஸ் ரெசிபியை தெரிந்து வைத்துக் கொண்டால் அவசர காலத்திற்கு உதவியாக இருக்கும்.
உங்களுக்கு இந்த மசாலா தேங்காய் சாதம் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா தேங்காய் சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கெதள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* தேங்காய் - 3/4 கப்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* பூண்டு - 2 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* அரைத்த மசாலா
* வடித்த சாதம் - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் தேங்காய், மிளகாய் தூள், மல்லித் தூள்,
மஞ்சள் தூள், பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து, நீர்
சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய பாதி வெங்காயம் மற்றும் நறுக்கிய
பச்சை மிளகாயை சேர்த்து, சிறிது கறிவேப்பிலையைத் தூவி நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து குறைவான தீயில்
வைத்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான மசாலா தேங்காய் சாதம்
தயார்.



Click it and Unblock the Notifications
