Latest Updates
-
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
எப்பவும் ஒரே மாதிரி சிக்கன் கிரேவி செய்யாம.. ஒரு டைம் இப்படி ட்ரை பண்ணுங்க.. சூப்பரா இருக்கும்..
Lazy Chicken Gravy Recipe In Tamil: விடுமுறை நாட்களில் வீட்டில் காலையில் பூரி செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக சிக்கனை செய்து சாப்பிடும் வழக்கம் நிறைய வீட்டில் இருக்கும். உங்கள் வீட்டிலும் இப்பழக்கம் உள்ளதா? அப்படியானால் பூரிக்கு ஒரே மாதிரி சிக்கன் கிரேவி செய்யாமல், சற்று வித்தியாசமாக ஒருமுறை முயற்சி செய்யுங்கள்.
அதுவும் இந்த மாதிரி சிக்கன் கிரேவியை செய்தால், பூரியுடன் மட்டுமின்றி, சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 50 மிலி
* சிக்கன் - 1 கிலோ
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 3
* கல்பாசி - சிறிது
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 4 துண்டு
* பூண்டு - 5 பல்
* சின்ன வெங்காயம் - 10
* தக்காளி - 1
* கொத்தமல்லி - சிறிது
* புதினா - சிறிது
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* தயிர் - 50 மிலி
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு, கல்பாசி
ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் கழுவிய சிக்கனை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க
வேண்டும். சிக்கனை வதங்கிக் கொண்டிருக்கும் போதே, மிக்சர் ஜாரில்
இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினா,
மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், சோம்பு, சீரகம், மிளகு, தயிர்
ஆகியவற்றை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த விழுதை சிக்கனுடன் சேர்த்து கிளறி, கிரேவிக்கு
தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, 10
நிமிடம் நன்கு கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* சிக்கனில் உள்ள நீர் சற்று குறைந்து, எண்ணெய் மேலே மிதந்து வரும்
போது, மேலே சிறிது கறிவேப்பிலை தூவி இறக்கினால், சுவையான சிக்கன்
கிரேவி தயார்.
Image Courtesy: Papitha's Kitchen



Click it and Unblock the Notifications
