Latest Updates
-
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும்
1/2 கப் வேர்க்கடலையும், வெண்டைக்காயும் வெச்சு.. இப்படி ஒரு ரெசிபியை ட்ரை பண்ணுங்க.. அட்டகாசமா இருக்கும்..
Ladies Finger Thokku Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் வெண்டைக்காயை சாப்பிடமாட்டார்களா? எப்படியாவது அவர்களை வெண்டைக்காயை சாப்பிட வைக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் அதை வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், சற்று வித்தியாசமாக தொக்கு செய்யுங்கள். இந்த வெண்டைக்காய் தொக்கு சாதத்துடன் மட்டுமின்றி, தோசை, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் நன்றாக இருக்கும்.
உங்களுக்கு வெண்டைக்காய் தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
வறுத்து பொடி செய்வதற்கு...
* வேர்க்கடலை - 1/2 கப்
* பூண்டு - 3 பல்
வறுத்து அரைப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 10
* கறிவேப்பிலை - 1 கொத்து
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* வெண்டைக்காய் - 250 கிராம்
* சிறிய தக்காளி - 2
* புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை
சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு சேர்த்து வதக்கி இறக்கி, ஒரு தட்டில் போட்டு
குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், வெந்தயம், கடுகு, சீரகம், மல்லி விதை, வரமிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி, அதையும் ஒரு தட்டில்
போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
வெண்டைக்காய் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய தக்காளி, புளி சேர்த்து நன்கு மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த மல்லி விதை, வரமிளகாய் கலவையை
சேர்த்து கொரவொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வதக்கிய வெண்டைக்காயை சேர்த்து கொரகொரவென்று அரைத்து,
ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஈரமில்லாத மிக்சர் ஜாரில் வறுத்த வேர்க்கடலை மற்றும் பூண்டு
சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* அடுத்து பொடித்த வேர்க்கடலை பொடியை அரைத்த வெண்டைக்காயுடன் சேர்த்து
நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு,
பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, வரமிளகாய், பூண்டு சேர்த்து நன்கு
தாளித்து, வெண்டைக்காயுடன் சேர்த்து கிளறினால், சுவையான வெண்டைக்காய்
தொக்கு தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications
