Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
குங் பாவ் பன்னீர்
நீங்கள் பன்னீர் பிரியரா? சைனீஸ் ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுவீர்களா? அப்படியானால் இன்று இந்தோ-சைனீஸ் ரெசிபியை நாம் பார்ப்போம். இந்த ரெசிபியின் பெயர் குங் பாவ் பன்னீர்.
நீங்கள் பன்னீர் பிரியரா? சைனீஸ் ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுவீர்களா? அப்படியானால் இன்று இந்தோ-சைனீஸ் ரெசிபியை நாம் பார்ப்போம். இந்த ரெசிபியின் பெயர் குங் பாவ் பன்னீர். இந்த பன்னீர் ரெசிபியில் பன்னீரை வறுத்து சாஸ் உடன் சேர்த்து செய்வோம். இந்த குங் பாவ் பன்னீர் ப்ளைன் ரைஸ் அல்லது சீசுவான் ரைஸ் உடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த குங் பாவ் பன்னீரை அப்படியே கூட சாப்பிடலாம்.

உங்களுக்கு குங் பாவ் பன்னீர் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குங் பாவ் பன்னீர் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ள
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* வறுத்த வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4-5
* சிவப்பு குடைமிளகாய் - 1/2 (மெல்லிய துண்டுகளாக நறுக்கியது)
* ஸ்பிரிங் ஆனியன் - ஒரு கைளயவு (பொடியாக நறுக்கியது)
பன்னீருக்கு...
* பன்னீர் - 200 கிராம்
* சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
சாஸ் தயாரிப்பதற்கு...
* வெஜிடேபிள் ஸ்டாக் - 1 கப் அல்லது 1 க்யூப்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
* வினிகர் - 1 டீஸ்பூன்
* சோள மாவு - 1 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வெஜிடேபிள் ஸ்டாக் க்யூப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி சிறிது நேரம் க்யூப் கரையும் வரை ஊற வையுங்கள்.
* பின் அதில் சோயா சாஸ், வினிகர், சிறிது சர்க்கரை, உப்பு, சோள மாவு சேர்த்து நன்கு கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பௌலில் பன்னீர் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சோயா சாஸ், உப்பு, சோள மாவு, சிறிது நீர் சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளை சேர்த்து வறுத்து இறக்கி ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே பேனில் சிறிது எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு பேஸ்ட் அல்லது நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாள், வேர்க்கடலை சேர்த்து சில நிமிடங்கள் வறுக்க வேண்டும்.
* அதன் பின் சிவப்பு குடைமிளகாயை சேர்த்து ஒருமுறை கிளறி, தயாரித்து வைத்துள்ள சாஸை ஊற்றி கிளறி, கொதிக்க வையுங்கள்.
* கலவையானது கெட்டியாக ஆரம்பிக்கும் போது, வறுத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து சில நிமிடங்கள் குறைவான தீயில் கொதிக்க வைத்து, மேலே ஸ்ப்ரிங் ஆனியனை தூவி நன்கு கிளறி இறக்கினால், குங் பாவ் பன்னீர் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications












