Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
மணமணக்கும்.. ருசியான.. செட்டிநாடு ஆட்டு குடல் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
Chettinad Kudal Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஆட்டுக்குடல் ரொம்ப பிடிக்குமா? ஆனால் உங்களுக்கு ஆட்டுக்குடலை எப்படி சமைப்பது என்று தெரியாதா? ஆட்டுக்குடல் உடலுக்கு மிகவும் நல்லது. இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. ஆட்டுக்குடலைக் கொண்டு கிரேவி, குழம்பு, வறுவல் என்று செய்து சாப்பிடலாம். நீங்கள் சாதத்துடன் அல்லது இட்லி, தோசையுடன் சாப்பிட நினைத்தால், ஆட்டுக்குடல் கிரேவி அல்லது குழம்பை செய்யலாம்.
அதுவும் உங்களுக்கு செட்டிநாடு சமையல் பிடிக்குமானால், செட்டிநாடு ஸ்டைலில் ஆட்டுக்குடல் கிரேவியை ட்ரை செய்யுங்கள். இந்த குடல் கிரேவி செய்வதற்கு மிகவும் சுலபமாகவும், வீடே மணக்கும் அளவில் சுவையுடனும் இருக்கும். மேலும் இது பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு ஆட்டுக்குடல் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு ஆட்டுக்குடல் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஆட்டுக்குடல் - 1
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 3
* அன்னாசிப்பூ - 1
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 4
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* செட்டிநாடு சிக்கன் மட்டன் மசாலா - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 டம்ளர்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஆட்டு குடலை சுடுநீரில் மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து,
3-4 முறை அலசிக் கொள்ள வேண்டும். அப்படி அலசும் போது, அதன் மேல் உள்ள
தோலை உரித்து நீக்கிவிட வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, அன்னாசிப்பூ, ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை
சேர்த்து நல்ல மணம் வரும் வரை தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க
வேண்டும்.
* அடுத்து பொடியாக நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து,
தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் செட்டிநாடு சிக்கன் மட்டன் மசாலாவை சேர்த்து 2 நிமிடம்
கிளறி விட வேண்டும்.
* பிறகு சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, கழுவி
வைத்துள்ள ஆட்டு குடலை சேர்த்து நன்கு ஒன்று சேரும் வரை 5 நிமிடம்
கிளறி விட வேண்டும்.
* பின் அதில் கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி
8-9 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, ஒரு
5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக சிறிது கொத்தமல்லியை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான
செட்டிநாடு ஆட்டு குடல் கிரேவி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications
