Latest Updates
-
நீர் தோசையும், தண்ணி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கவலைகளும், தோல்வியும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா?
இந்த 5 பொருள் இருந்தா போதும்.. 10 நிமிஷத்துல சுவையான அவல் லட்டு செஞ்சுடலாம்...
Krishna Janmashtami 2023: இன்று கிருஷ்ண ஜெயந்தி என்பதால் பலரும் தங்கள் வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு கிருஷ்ணன் மற்றும் ராதையின் வேடமிடுவதோடு, மாலை வேளையில் கிருஷ்ண பகவானுக்கு பிடித்த பலகாரங்களை செய்து படைத்து, கிருஷ்ணரை வழிபடுவார்கள்.
கிருஷ்ணருக்கு வெண்ணெய், பால் பொருட்கள், அவல், ஜவ்வரிசி போன்ற பொருட்கள் மிகவும் பிடிக்கும். எனவே இந்த பொருட்களைக் கொண்டு பலகாரங்களை செய்து கிருஷ்ணரை வழிபடுவார்கள்.

தற்போது நிறைய பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். பல அலுவலகங்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி நாளில் விடுமுறை இல்லை. இத்தகைய சூழ்நிலையில் கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்களை செய்ய முடியாமல் வருத்தப்படுவார்கள்.
ஆனால் அப்படி வேலைக்கு செல்லும் பெண்கள் கிருஷ்ணருக்கு பிடித்த அவலைக் கொண்டு, அவருக்கு பிடித்த லட்டு செய்து கொடுக்கலாம். அதுவும் 10 நிமிடத்தில், வெறும் 5 பொருட்களைக் கொண்டே அட்டகாசமான சுவையில் அவல் லட்டு செய்யலாம்.
உங்களுக்கு அவல் லட்டு எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் லட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அவல் - 2 கப்
* பொட்டுக்கடலை - 1 கப்
* சர்க்கரை - 1 1/2 கப்
* நெய் - 1/4 கப்
* பால் - 2 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
* முந்திரி - 10 (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய்
ஊற்றி சூடானதும், அவலை சேர்த்து 3 நிமிடம் பொன்னிறமாகும் வரை வறுத்து
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு பொடித்து, தனியாக எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு அதே ஜாரில் பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து
நன்கு பொடி செய்து, அதை அவல் பொடியுடன் சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* அடுத்து அதே வாணலியை அடுப்பில் வைத்து, மீதமுள்ள நெய் ஊற்றி
சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, அதை
அப்படியே அவல் பொடியில் ஊற்ற வேண்டும்.
* பிறகு அதில் சிறிது பாலை ஊற்றி, கையால் நன்கு கிளறி, அதை சிறுசிறு
உருண்டைகளாக பிடித்தால், சுவையான அவல் லட்டு தயார்.
குறிப்பு:
* இந்த லட்டு செய்வதற்கு பால் சேர்த்தால், லட்டுக்களை 2 நாட்கள்
வைத்து சாப்பிட விரும்பினால், அந்த லட்டுக்களை ஃப்ரிட்ஜ்ஜில் வைக்க
வேண்டும்.
* ஒருவேளை 2 நாட்களுக்கு மேல் லட்டுக்களை வைத்து சாப்பிட நினைத்தால்,
அதுவும் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்க விரும்பாவிட்டால், இந்த லட்டு செய்வதற்கு
பால் சேர்க்காமல் நெய்யை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். நெய் சேர்த்த
லட்டு நீண்ட நாட்கள் நன்றாக அறை வெப்பநிலையில் இருக்கும்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications