Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
கோவைக்காய் இருந்தா.. இப்படி ஒருடைம் தொக்கு செய்யுங்க.. மட்டன் கிரேவியே தோத்து போயிடும்...
Kovakkai Curry Thokku Recipe In Tamil: மதியம் சாதத்துக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கோவைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கோவைக்காயைக் கொண்டு கிராமத்து ஸ்டைலில் ஒரு தொக்கு செய்யுங்கள்.
இந்த தொக்கு சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரியுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு கோவைக்காய் தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோவைக்காய் தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* கறிவேப்பிலை - 2 கொத்து
* பச்சை மிளகாய் - 5
* பூண்டு - 15 பல்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கெட்டி தயிர் - 100 மிலி
வதக்குவதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கோவைக்காய் - 1/2 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - தேவையான அளவு
* மட்டன் மசாலா/கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் கோவைக்காயை நீரில் கழுவி, அதை மெல்லிய நீளத் துண்டுகளாக
வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில், கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய்,
பூண்டு, மிளகு, சோம்பு, சீரகம், மஞ்சள் தூள் மற்றும் தயிர் சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய கோவைக்காயை சேர்த்து, அத்துடன்
மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடம்
நிறம் மாறும் வரை வதக்கி, அதை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து
பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* 2 நிமிடம் நன்கு வதக்கியதும், அதில் கோவைக்காயை சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* பின் அதில் கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, மட்டன்
மசாலா/கரம் மசாலாவை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி கிளறி, மூடி
வைத்து, 2 நிமிடம் உயர் தீயில் வேக வைக்க வேண்டும்.
* 2 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் வெல்லத்தை சேர்த்து
கிளறி இறக்கினால், சுவையான கோவைக்காய் கறி தொக்கு தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications