Latest Updates
-
பீட்ரூட் தோசையும், புதினா சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 01 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நீண்டநாள் ஆசை நிறைவேறப்போகுதாம் -
August 2026 Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
காரசாரமான பன்னீர் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
தலைமுடி வறண்டு பிரஷ் மாதிரி இருக்கா? அப்ப இந்த வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
ஆகஸ்ட் மாதம் நிகழும் ஆண்டின் 2-வது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
வெண்டைக்காயை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்.. -
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
ஆந்திரா ஸ்பெஷல் கோவக்காய் சட்னி ரெசிபி...ஒரு தடவ செஞ்சு பாருங்க..இனிமே சாப்பாட்டுக்கு குழம்பே வைக்க மாட்டிங்க!
Kovakkai Chutney Recipe in Tamil: பொதுவாக சட்னிகள் என்றால் இட்லி, தோசை போன்ற டிபன்களுக்காக செய்யப்படுபவை, ஆனால் சில சமயங்களில் சட்னிகள் சாதத்திற்கும் செய்யப்படும். குறிப்பாக ஆந்திராவில் சாதத்துக்கு கோங்குரா சட்னி போல பலவகை சட்னிகள் பரிமாறப்படும். அப்படி ஆந்திராவில் மிகவும் பிரபலமான ஒரு சட்னிதான் கோவைக்காய் சட்னி.
பொதுவாக கோவைக்காயை நாம் பொரியல் செய்துதான் சாப்பிடுவோம். ஆனால் ஆந்திராவில் அதனை அட்டகாசமான சட்னியாக செய்வார்கள். இந்த சட்னி சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும், மேலும் இதை இட்லி, தோசைக்குக் கூட சைடிஷாக வைத்துகூட சாப்பிடலாம். இந்த பதிவில் ஆந்திரா ஸ்பெஷல் கோவைக்காய் சட்னியை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- 250 கிராம் கோவைக்காய்
- 10 பச்சை மிளகாய்
- புளி சிறிதளவு
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1/4 கப் பச்சை கொத்தமல்லி
- உப்பு தேவையான அளவு
வறுத்து அரைக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் வெந்தயம்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுந்து
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 கொத்து கறிவேப்பிலை
தாளிக்க:
- 3 ஸ்பூன் எண்ணெய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் சீரகம்
- 1/2 ஸ்பூன் உளுந்து
- 1/2 ஸ்பூன் கடலைப் பருப்பு
- 2 வர மிளகாய்
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் சூடானதும் முதலில் தாளிக்க தேவையான பொருட்களை நன்கு வாசனை வரும் வரை வதக்க வேண்டும்.
- முதலில் வெந்தயத்தை கருகாமல் வறுத்து விட்டு, பின்னர் கடுகு, உளுந்து மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும். இறுதியாக, சீரகம் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து வறுத்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
- மசாலா நன்கு குளிர்ந்த பிறகு அதை பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
- அதே கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய கோவைக்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இந்த கலவையை மூடி வைத்து காய்கறி நன்கு வேகும் வரை வதக்கவும். புளி சேர்த்து 30 விநாடிகள் வதக்கி, அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
- மிக்ஸி ஜாரில்,வறுத்த கோவைக்காய் மற்றும் பச்சை மிளகாய் மற்றும் மென்மையாக அரைத்த மசாலா மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் கரடுமுரடான பேஸ்டாக அரைக்கவும்.
- மீண்டும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் சீரகம் சேர்த்து வதக்கவும். இறுதியாக ஒரு சிட்டிகை பெருங்காயம் மற்றும் கொத்தமல்லி சேர்த்து தாளித்து சட்னி மீது ஊற்றவும்.
- இந்த சட்னியை சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இதை இட்லி, தோசையுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications