Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
சன்டே ஸ்பெஷல் - கொத்து கோழி ரெசிபி
இந்த வார விடுமுறையில் நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு வித்தியாசமான ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? இந்த வாரம் நீங்கள் சிக்கன் எடுத்தால், அதைக் கொண்டு ஒரு சுவையான கொத்து கோழி சைடு டிஷ்ஷை செய்யுங்கள்.
இந்த வார விடுமுறையில் நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு வித்தியாசமான ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? இந்த வாரம் நீங்கள் சிக்கன் எடுத்தால், அதைக் கொண்டு ஒரு சுவையான கொத்து கோழி சைடு டிஷ்ஷை செய்யுங்கள். இது ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த ரெசிபி குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு கொத்து கோழி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்து கோழி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/2 கிலோ
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* கறிவேப்பிலை - சிறிது
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 1/4 கப்
* பொட்டுக்கடலை - 3 டேபிள் ஸ்பூன் (பொடி செய்து கொள்ளவும்)
* உப்பு - சுவைக்கேற்ப
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரில் சிக்கனையும், அரைத்த மசாலாவையும் போட்டு, அடுப்பில் வைத்து குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, சிக்கனை மட்டும் தனியாக பிரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் சிக்கனில் உள்ள எலும்பை பிரித்து நீக்கிவிட்டு, தசைப்பகுதியை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சில நொடிகள் வதக்கி, மசாலா பொடிகள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, மீதமுள்ள மசாலாவை சேர்த்து கிளற வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்த சிக்கன் துண்டுகளைப் போட்டு, சிறிது நீரைத் தெளித்து நன்கு கிளறி, சிறிது நேரம் மூடி வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொட்டுக்கடலை பொடியை தூவி கிளறி, மேலே சிறிது எலுமிச்சை சாற்றினை பிழிந்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான கொத்து கோழி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications

