Latest Updates
-
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
1 கப் பச்சைப் பயறு இருந்தா இந்த மாதிரி கொங்கு ஸ்டைல் கடையல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும் -
கடகத்தில் இருக்கும் செவ்வாய்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Kothavarangai Poriyal Recipe In Tamil: காய்கறிகளில் கொத்தவரங்காயை நிறைய பேர் விரும்பி சாப்பிடமாட்டார்கள். ஏனெனில் இது சற்று கசப்பு சுவையுடன் இருக்கும். ஆனால் இந்த கொத்தவரங்காய் கலோரி குறைவானது, அதே சமயம் இதில் நார்ச்சத்து, வைட்டமின் கே, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவை அதிகம் உள்ளன. இந்த காய்கறி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் இந்த காயை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அதிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

இவ்வளவு சத்துக்கள் நிறைந்த கொத்தவரங்காயை உங்கள் வீட்டில் உள்ளோரை சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் அதைக் கொண்டு பொரியல் செய்யுங்கள். அதுவும் தேங்காய் மற்றும் வேர்க்கடலையை அரைத்து சேர்த்து பொரியல் செய்யும் போது, சுவை பிரமாதமாக இருக்கும். முக்கியமாக பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு கொத்தவரங்காய் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்தவரங்காய் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தவரங்காய் - 300 கிராம் (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
* அரைத்த தேங்காய்
அரைப்பதற்கு...
* தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
* வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 2 பல்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கறிவேப்பிலை
தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய கொத்தவரங்காயை சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு தூவி
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் வேக
வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் தேங்காய், வேர்க்கடலை, சீரகம், மிளகு,
பூண்டு ஆகியவற்றை சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள
தேங்காயை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கினால், சுவையான
கொத்தவரங்காய் பொரியல் தயார்.



Click it and Unblock the Notifications
