Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
சப்பாத்திக்கு... ஒருடைம் கொத்தவரங்காயை வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. செமயா இருக்கும்...
Kothavarangai Gravy Recipe In Tamil: இன்று இரவு வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் உருளைக்கிழங்கை சைடு டிஷ்ஷாக செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் கொத்தவரங்காய் உள்ளதா? ஆனால் அதை உங்கள் வீட்டில் யாரும் சாப்பிடமாட்டார்களா?
அப்படியானால் அந்த கொத்தவரங்காய் கொண்டு ஒருமுறை கிரேவி செய்யுங்கள். இந்த கொத்தவரங்காயைக் கொண்டு கிரேவி செய்தால், அது சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு கொத்தவரங்காய் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்தவரங்காய் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* நறுக்கிய தேங்காய் - 1/2 கப்
* வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 8 பல்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
கிரேவிக்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தவரங்காய் - 200 கிராம் (சற்று நீளத் துண்டுகளாக
நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் தேங்காய், வேர்க்கடலை, பூண்டு, மிளகாய்
தூள் சேர்த்து ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை
சேர்த்து, வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து 1
நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து, அதில் நறுக்கிய கொத்தவரங்காயை சேர்த்து 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, கிரேவிக்கு தேவையான அளவு நீரை
ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, குக்கரை மூடி 4
விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து,
அதில் கரம் மசாலாவை சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து,
கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான கொத்தவரங்காய் கிரேவி
தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications