Latest Updates
-
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு!
வீட்டுல கொத்தமல்லி நிறையா இருக்கா? இப்படி சட்னி செய்யுங்க.. இட்லிக்கு பிரமாதமா இருக்கும்..
Kothamalli Vengaya Chutney Recipe: இன்று காலை உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? இட்லி, தோசைக்கு உங்கள் வீட்டில் உள்ளோர் சட்னியைத் தான் விரும்பி கேட்பார்களா? உங்களுக்கு எப்போதும் ஒரே சட்னியை செய்து போரடித்துவிட்டதா?
உங்கள் வீட்டில் கொத்தமல்லி நிறைய உள்ளதா? அப்படியானால் அந்த கொத்தமல்லியுடன், வெங்காயத்தை சேர்த்து வதக்கி சட்னியாக அரையுங்கள். இந்த கொத்தமல்லி வெங்காய சட்னி மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

முக்கியமாக இந்த சட்னி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். உங்களுக்கு கொத்தமல்லி வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே கொத்தமல்லி வெங்காய சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* சின்ன வெங்காயம் - 5
* கொத்தமல்லி - 1 கப்
* புளி - 1 சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயத்
தூள், சேர்த்து, உளுத்தம் பருப்பு நிறம் மாறும் வரை மிதமான தீயில்
வைத்து வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் கொத்தமல்லியை சேர்த்து வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அவற்றையும் மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பிறகு அத்துடன் புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நீர்
சேர்க்காமல் நன்கு அரைத்தால், சுவையான கொத்தமல்லி வெங்காய சட்னி
தயார்.
Image Courtesy: vidhyashomecooking



Click it and Unblock the Notifications
