Latest Updates
-
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு!
இதுவரை கொத்தமல்லி வெச்சு சட்னி செஞ்சுருப்பீங்க.. அடுத்தமுறை குழம்பு செய்யுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்...
Kothamalli Kuzhambu Recipe In Tamil: மதிய வேளையில் எப்போதும் ஒரே மாதிரி காய்கறிகளைப் போட்டு சாம்பார், குழம்பு செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான, அதே சமயம் சத்தான ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கொத்தமல்லி நிறையா இருக்கா? இதுவரை நீங்கள் கொத்தமல்லியை வெச்சு சட்னி தான் செய்திருப்பீர்கள்.
ஆனால் அடுத்தமுறை அந்த கொத்தமல்லியை வைத்து குழம்பு செய்யுங்கள். இந்த கொத்தமல்லி குழம்பு சாதத்துடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது ஒரு சத்தான குழம்பு. குழந்தைகள், பெரியோர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு கொத்தமல்லி குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்தமல்லி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சின்ன வெங்காயம் - 5-6 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பூண்டு - 2-3 பல்
* கொத்தமல்லி - 1 1/2 கப்
* புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
வதக்கி அரைப்பதற்கு...
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4-5
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சீரகம்,
வரமிளகாய், மல்லி, துவரம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும்
வரை வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு பொடி செய்து
கொள்ள வேண்டும். பின் புளியை நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு நிறம்
மாறும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் கொத்தமல்லியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பின்பு வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு புளிச்சாற்றுடன், அரைத்து வைத்துள்ள பொடி, மஞ்சள் தூள்,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்ததாக, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை
ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் புளிச்சாற்றினை ஊற்றி மிதமான தீயில் வைத்து 5 நிமிடம்
கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி பேஸ்ட்டை சேர்த்து கிளறி, 5
நிமிடம் மிதமான தீயில் வைத்து எண்ணெய் பிரியும் வரை 5 நிமிடம் கொதிக்க
வைத்து இறக்கினால், சுவையான கொத்தமல்லி குழம்பு தயார்.
Image Courtesy:



Click it and Unblock the Notifications
