Latest Updates
-
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும்
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Kongunattu Style Pachai Payaru Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் பச்சை பயறு உள்ளதா? இந்த பச்சை பயறை எப்போதும் ஒரே ஸ்டைலில் தான் சமைத்து சாப்பிடுவீர்களா? அப்படியானால் ஒருமுறை கொங்குநாட்டு ஸ்டைலில் பச்சை பயறு குழம்பு செய்து சாப்பிடுங்கள். இப்படி குழம்பு செய்யும் போது பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். வாரம் ஒருமுறை இந்த குழம்பை செய்து சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய புரோட்டீன், நார்ச்சத்து போன்றவை கிடைக்கும். வளரும் குழந்தைகளுக்கு பச்சை பயறு மிகவும் நல்லது.

உங்களுக்கு கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* பச்சை பயறு - 1 கப்
* தண்ணீர் - 4 கப்
* பூண்டு - 5 பல்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (உடைத்தது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பொடிப்பதற்கு..
* மல்லி - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 20
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பொடித்த பவுடர்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பச்சை பயறை
சேர்த்து நல்ல மணம் வந்து லேசாக நிறம் மாறும் வரை வறுத்து இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை நீரில் கழுவி, குக்கரில் சேர்த்து, அத்துடன் 4 கப்
தண்ணீர், 5 பல் பூண்டு, 2 உடைத்த பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து
குக்கரை மூடி, அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் மல்லி, சீரகம், வரமிளகாயை சேர்த்து
கொரகொரவென்று பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து பச்சை பயறை கொதிக்க வைக்க வேண்டும்.
* மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
தாளிப்பதற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் சின்ன
வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடித்த மல்லி சீரகத்தை சேர்த்து 1 நிமிடம் வறுத்து
இறக்கி, கொதித்துக் கொண்டிருக்கும் பச்சை பயறுடன் சேர்த்து கிளறி
விட்டு நன்கு 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு நன்கு கொதித்ததும், அதை இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு, மத்து
கொண்டு பச்சை பயறை கடைந்து விட வேண்டும்.
* பிறகு வடிகட்டி வைத்துள்ள நீரை சேர்த்து கலந்தால், சுவையான
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications
