Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சனி பகவானின் நட்சத்திரம் செல்லும் செவ்வாய்: செப்டம்பர் இறுதியில் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சொந்த கரன்சி, சொந்த ஏர்போர்ட் கூட இல்லாத உலகின் பணக்கார நாடு - இந்த நாட்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன்தான் இருக்காம் -
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
கொங்குநாடு ஸ்டைல் கடலை குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Kongunadu Style Sundal Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் சுண்டல் குழம்பை அடிக்கடி செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் தான் சுண்டல் குழம்பை செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை கொங்குநாடு ஸ்டைலில் சுண்டல் குழம்பை செய்யுங்கள்.
இப்படி குழம்பு செய்யும் போது, அது சாதத்துடன் மட்டுமின்றி, இட்லியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு மட்டன் குழம்பை போன்று மிகவும் சுவையாக இருக்கும். ஒருமுறை இப்படி சுண்டல் குழம்பை செய்தால், பின் அடிக்கடி இப்படிதான் செய்வீர்கள்.

உங்களுக்கு கொங்குநாடு ஸ்டைல் சுண்டல் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்குநாடு ஸ்டைல் கடலை குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கருப்பு கொண்டைக்கடலை - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - 1 பெரிய நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து, சாறு
எடுத்துக் கொள்ளவும்)
வறுப்பதற்கு..
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 6
* காஷ்மீரி மிளகாய் - 4
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
வதக்குவதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 200 கிராம்
* பூண்டு - 10 பல்
* தக்காளி - 1 (நறுக்கியது)
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கத்திரிக்காய் - 3
* உருளைக்கிழங்கு - 1
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் கருப்பு கொண்டைக்கடலையை நீரில் 2 முறை கழுவி, பின் நீரை
ஊற்றி 7-8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் புளியை நீரில் ஊற வைத்து பிசைந்து வடிகட்டி சாறு எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், மல்லி, சீரகம், மிளகு, வெந்தயம்,
வரமிளகாய், காஷ்மீரி வரமிளகாய் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து வறுத்து இறக்கி, ஒரு
தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன
வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு நிறம் மாற வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, மென்மையாகும்
வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து கொரகொரவென்று
அரைத்து, பின் வதக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய்
ஊற்றி சூடானதும், வெந்தயம், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் சின்ன
வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி,
அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் புளிச்சாற்றினை சேர்த்து, சிறிது
நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்துள்ள சுண்டலை நீருடன் அப்படியே சேர்த்து,
அதோடு நறுக்கிய கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து, உப்பு சுவை
பார்த்து, வேண்டுமானால் உப்பை சேர்த்து கலந்து, மூடி வைத்து, 10
நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான
கொங்குநாடு ஸ்டைல் சுண்டல் குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications
