Latest Updates
-
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
சாதத்துடன் சாப்பிட அற்புதமாக இருக்கும்... கொங்குநாடு பருப்பு குழம்பு
Kongunadu Paruppu Kuzhambu: இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் சிம்பிளாக ஏதாவது செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கொங்குநாடு பருப்பு குழம்பு செய்யுங்கள். இந்த பருப்பு குழம்பு சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். அதுவும் நெய் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வது மிகவும் சுலபம். 10 நிமிடத்தில் இந்த குழம்பை செய்துவிடலாம்.
உங்களுக்கு கொங்குநாடு பருப்பு குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்குநாடு பருப்பு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 1/4 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* விளக்கெண்ணெய் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
தாளிப்பதற்கு...
* கடலை எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 3 பல்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* புளி - 1 சிறிய நெல்லிக்காய் அளவு
* சுடுநீர் - 1/2 கப்
* நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் புளியை சுடுநீரில் 15 நிமிடம் ஊற வைத்து,
பின் அதை பிசைந்து சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் குக்கரில் துவரம் பருப்பைக் கழுவிப் போட்டு, அத்துடன் மஞ்சள்
தூள், விளக்கெண்ணெய் மற்றும் 1 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி, 5
விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை மத்து கொண்டு கடைந்து
விட வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம், பூண்டு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம் மற்றும் சிறிது உப்பு தூவி 3-4 நிமிடம்
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் புளிச்சாற்றினை ஊற்றி 2 நிமிடம் கொதிக்க வைக்க
வேண்டும்.
* இறுதியில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து கொதிக்க வைத்து, இறக்கி
நெய் ஊற்றி கிளறினால், சுவையான கொங்குநாடு பருப்பு குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications
