Latest Updates
-
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
எப்பவும் கொள்ளுவை கடைஞ்சு தான் சாப்பிடுவீங்களா.. அடுத்தமுறை அதை வெச்சு குழம்பு செய்யுங்க.. டக்கரா இருக்கும்..
Kongunad Style Kollu Paruppu Kuzhambu Recipe: புரட்டாசி மாதத்தில் அசைவ உணவை தவிர்ப்பவர்கள் சந்திக்கும் ஒரு பிரச்சனை தினமும் என்ன சமைத்து சாப்பிடுவது என்பதாகவே இருக்கும். அந்த வகையில் உங்களின் வசதிக்காக ஒரு சுவையான மற்றும் சத்தான ரெசிபியைத் தான் இன்று பார்க்கப் போகிறோம்.
அது தான் கொங்குநாடு ஸ்டைல் கொள்ளு பருப்பு குழம்பு. இதுவரை நீங்கள் கொள்ளு பருப்பை கடைந்து தான் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அந்த கொள்ளு பருப்பைக் கொண்டு கொங்குநாடு ஸ்டைலில் குழம்பு செய்தால் மிகவும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு கொங்குநாடு ஸ்டைல் கொள்ளு பருப்பு குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்குநாடு ஸ்டைல் கொள்ளு பருப்பு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலாவிற்கு...
* கொள்ளு பருப்பு - 1/4 கப்
* மல்லி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4
* துருவிய தேங்காய் - 1/2 கப்
பிற பொருட்கள்...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* சின்ன வெங்காயம் - 15 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* புளி - 1 சிறிய நெல்லிக்காய் அளவு
* வெல்லம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளுவை போட்டு,
குறைவான தீயில் வைத்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கிக் குளிர
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், மல்லி
விதைகளை சேர்த்து, அதையும் நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி, ஒரு
தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் துருவிய தேங்காயை வாணலியில் போட்டு லேசாக வறுத்து இறக்கி,
அதையும் குளிர வைக்க வேண்டும். அதே சமயம் புளியை 1 கப் நீரில் 20
நிமிடம் ஊற வைத்து, அதை பிசைந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் எடுத்து,
தேவையான அளவு நீரை ஊற்றி, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடனதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயத்தை
சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி,
அத்துடன் வெல்லத்தையும் சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி
வைத்து 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து நன்கு கொதிக்க வைத்து
இறக்கினால், சுவையான கொங்குநாடு ஸ்டைல் கொள்ளு பருப்பு குழம்பு
தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications
