Latest Updates
-
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
கடகத்தில் இருக்கும் செவ்வாய்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா?
1 கப் பச்சைப் பயறு இருந்தா இந்த மாதிரி கொங்கு ஸ்டைல் கடையல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும்
Kongu Style Pasi Payaru Kadayal Recipe in Tamil: மதியம் எப்போதும் சாம்பார், புளிக்குழம்பு என்று ஒரேமாதிரியான குழம்பு செய்து போரடித்துவிட்டதா? சற்று சிம்பிளாகவும், அதே சமயம் சாதத்துக்கு அட்டகாசமாகவும் இருக்கும் ஒரு சைடிஷை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பாசிப் பயறு உள்ளதா? அப்படியானால் அதை வைத்து ஒரு அட்டகாசமான கொங்குநாடு கடையல் செய்யுங்க.

பாசிப் பயறை வைத்து பொதுவாக வைத்து பொதுவாக பொரிச்சக் குழம்பு அல்லது பாயாசம் போன்றவற்றைத்தான் செய்வோம், ஆனால் பாசிப் பயிறை வைத்து கொங்கு ஸ்டைலில் சூப்பரான கடையல் செய்யலாம். இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட மட்டுமின்றி தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்கும் சூப்பர் சைடிஷாக இருக்கும். இந்த கொங்கு ஸ்டைல் பாசிப் பயறு கடையல் மேற்கு தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானதாகும். இதை செய்வதும் மிகவும் எளிதானதாகும்.
உங்களுக்கு கொங்கு ஸ்டைல் பாசிப் பயறு கடையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்கு பாசிப் பயறு கடையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1/2 கப் பச்சைப்பயறு
- 4 சிறிய பழுத்த தக்காளி
- 15 சின்ன வெங்காயம்
- 5 பல் பூண்டு
- 3 பச்சை மிளகாய்
- 1/4 டீஸ்பூன் சீரகம்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 3/4 டீஸ்பூன் உப்பு
- 1/2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 4 கப் தண்ணீர்
தாளிக்க:
- 1 டீஸ்பூன் நெய்
- 1/4 டீஸ்பூன் சீரகம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 வரமிளகாய்
செய்முறை:
- முழுப் பச்சைப்பயறை கழுவி, 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். ஊறிய நீரை வடித்துவிட்டு, பயறை ஒரு பிரஷர் குக்கரில் சேர்க்கவும்.
- அத்துடன் தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், சீரகம், மஞ்சள் தூள், உப்பு, சிறிது எண்ணெய் மற்றும் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- குக்கரை மூடி, முதல் விசில் வரும் வரை காத்திருக்கவும். விசில் வந்ததும், தீயைக் குறைத்து வைத்து 15 நிமிடங்கள் தொடர்ந்து வேகவைக்கவும். அதன்பின் அழுத்தம் தானாக வெளியேறும் வரை காத்திருக்கவும்.
- அழுத்தம் வெளியேறியதும் ஒரு கரண்டியை வைத்து பருப்பை நன்கு மசித்துத் தனியாக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்துச் சிறிது நெய் ஊற்றவும். அதில் சீரகம், கறிவேப்பிலை மற்றும் வர மிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும். சீரகம் பொரியும் வரை காத்திருக்கவும்.
- தாளித்த இந்தக் கலவையை மசித்து வைத்துள்ள பயறுடன் சேர்த்து நன்கு கலக்கவும். அவ்வளவுதான் சூப்பரான மற்றும் ஆரோக்கியமான கொங்கு ஸ்டைல் பாசிப்பயறு கதையல் ரெடி!



Click it and Unblock the Notifications
