Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் சத்தான உளுந்து சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரமாதமா இருக்கும் -
இந்தியாவில் தங்கம் கிடைத்த 3 தங்க நதிகள் என்னென்ன தெரியுமா? இந்த நதிகள் எந்த மாநிலத்தில் ஓடுது தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாசம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
தஞ்சாவூர் ஸ்பெஷல் அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. சைடு டிஷ்ஷே வேண்டாம்.. -
அக்டோபர் 12 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை பிரச்சினைகள் விடாமல் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
Navratri 2026: யானை வாகனத்தில் வரும் துர்கா தேவியால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரங்க இவங்க தான்! -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. -
குரு அதிசார பெயர்ச்சி பலன் 2026 - பாதிப்பு யாருக்கு? பரிகாரம் என்ன? - ஜோதிடர் கணிப்பு! -
புரட்டாசி ஸ்பெஷல் செட்டிநாடு கல்யாண பிரிஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
ஓம நீர் Vs சோம்பு நீர் - இவற்றில் உண்மையில் செரிமானத்திற்கு சிறந்தது எது?
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
Kollu Dosa With Poondu Thakkali Chutney Recipe In Tamil: எப்போதும் ஒரே மாதிரி இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான டிபனை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கொள்ளு தோசை செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக பூண்டு தக்காளி சட்னியை செய்யுங்கள். இந்த டிபன் காம்போ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு இந்த கொள்ளு தோசை மற்றும் பூண்டு தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொள்ளு தோசை, பூண்டு தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு தோசை மாவிற்கு...
* பச்சரிசி - 1 டம்ளர்
* கொள்ளு - 1/2 டம்ளர்
* உளுத்தம் பருப்பு - 1/4 டம்ளர்
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* அவல் - 1/4 கப் (10 நிமிடம் நீரில் ஊற வைத்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
சட்னிக்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4
* சின்ன வெங்காயம் - 15
* பூண்டு - 20 பல்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* கறிவேப்பிலலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, கொள்ளு, வெந்தயம் ஆகியவற்றை
எடுத்து நீரில் 4 முறை கழுவி விட்டு, பின் சுத்தமான நீரை ஊற்றி 8
மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் 1/4 கப் அவலை நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் ஊற வைத்த பொருட்களை சேர்த்து, தேவையான அளவு
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை ஊற்றி, 1/2 கப் நீரை ஊற்றி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து, மாவை
மூடி வைத்து 5-6 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து சட்னி செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்னர் அதில் சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிது
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை,
பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால்,
பூண்டு தக்காளி சட்னி தயார்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி, வேக வைத்து
எடுத்தால், கொள்ளு தோசை தயார்.



Click it and Unblock the Notifications
