Just In
- 3 hrs ago
இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பணம் சம்பந்தமாக ஏதேனும் தகராறு ஏற்படலாம்...
- 10 hrs ago
ஆண்களை விட பெண்கள் எப்படி வித்தியாசமாக கள்ள உறவில் ஏமாற்றுகிறார்கள்? ஏன் ஏமாற்றுகிறார்கள் தெரியுமா?
- 13 hrs ago
மாம்பழ பூரி
- 15 hrs ago
உங்க உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆஞ்சினா மார்பு வலி வரப்போகுதுனு அர்த்தமாம்... உஷார்!
Don't Miss
- Technology
சூப்பர் கேமரா.! இப்படியொரு சியோமி போனுக்காக தான் வெயிட்டிங்.! எப்போது அறிமுகம் தெரியுமா?
- Movies
கமல் - உதயநிதியை இணைத்தவர்.. விக்ரம் வெற்றிக்கு காரணமானவர்.. யார் இந்த மகேந்திரன்!
- News
தேர்தல் ஆணையம், சுப்ரீம் கோர்ட்.. ஓபிஎஸ் கோஷ்டியின் பாய்ச்சல்..எதுவும் நடக்காதோ பீதியில் ஈபிஎஸ் அணி!
- Sports
சாவு பயத்தை காண்பித்த அயர்லாந்து.. கடைசி ஓவரில் உம்ரான் மாலிக் அசத்தல்.. இந்தியா த்ரில் வெற்றி
- Finance
வேலை நேரம், விடுமுறையில் என்ன மாற்றம் வரலாம்.. புதிய தொழிலாளர் சட்டம் சொல்வதென்ன?
- Automobiles
பாத்திரங்களை போல் விமானத்தையும் அலுமினியத்தில்தான் உருவாக்கறாங்க! இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய ரகசியம் இருக்கா?
- Travel
இந்தியாவின் மார்பில் சிட்டிக்குள் ஒரு சுற்றுலா – கிஷன்கரில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
Kerala Style Chicken Curry Recipe : கேரளா ஸ்டைல் சிக்கன் கிரேவி
தமிழகத்தை அடுத்து கேரளா ஸ்டைல் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். குறிப்பாக கேரளா ஸ்டைல் அசைவ உணவுகள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். நீங்கள் கேரளா ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுபவரா? அதுவும் சிக்கன் ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுவீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் கேரளா ஸ்டைல் சிக்கன் கிரேவியை செய்து சாப்பிடுங்கள். இந்த சிக்கன் கிரேவி சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
உங்களுக்கு கேரளா ஸ்டைல் சிக்கன் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ஸ்டைல் சிக்கன் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 750 கிராம்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* சீரகம் - 2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 பெரிய துண்டு
* ஏலக்காய் - 6
* கிராம்பு - 6
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மசாலாவிற்கு...
* எண்ணெய் - 1/4 கப்
* வெங்காயம் - 3 (நறுக்கியது)
* தக்காளி - 4 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் விழுது - 1/2 கப்
* கொத்தமல்லி - ஒரு கையளவு
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அந்த சிக்கனில் மிளகாய் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களான சீரகம், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மல்லித் தூள் மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து உப்பு சிறிது தூவி மென்மையாக வதக்கி இறக்க வேண்டும்.
* பின் அதை குளிர வைத்து மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த பட்டை மசாலாவை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும். அதன் பின் அரைத்த வெங்காய தக்காளி மசாலாவை சேர்த்து, உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து கிளறி, மிதமான தீயில் மூடி வைத்து 30-35 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, 15 நிமிடம் வேக வைத்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், கேரளா ஸ்டைல் சிக்கன் கிரேவி தயார்.
Image Courtesy: yummytummyaarthi