Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
கேரளா ஸ்பெஷல் இறால் ரோஸ்ட்
இந்த வார இறுதியில் இறால் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அதே சமயம் வித்தியாசமான இறால் ரெசிபியை செய்து சுவைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் கேரளா ஸ்பெஷல் இறால் ரோஸ்ட் செய்து சாப்பிடுங்கள்.
சிக்கன் சாப்பிட்டு அலுத்துவிட்டதா? இந்த வார இறுதியில் இறால் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அதே சமயம் வித்தியாசமான இறால் ரெசிபியை செய்து சுவைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் கேரளா ஸ்பெஷல் இறால் ரோஸ்ட் செய்து சாப்பிடுங்கள். இந்த கேரளா ஸ்பெஷல் இறால் ரோஸ்ட் வெள்ளை சாதம், ரசம் சாதம், சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இந்த இறால் ரோஸ்ட் நல்ல சுவையைக் கொண்டது. பேச்சுலர்களும் இதை முயற்சிக்கலாம்.

உங்களுக்கு கேரளா ஸ்பெஷல் இறால் ரோஸ்ட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ஸ்பெஷல் இறால் ரோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருர்த்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
இறால் ஊற வைப்பதற்கு...
* இறால் - 20-25
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த இறாலில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு பிரட்டி தனியாக ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், சிறிது உப்பு தூவி நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து நன்கு சில நிமிடங்கள் கிளறி விட வேண்டும்.
* பின் நெருப்பை குறைவில் வைத்து சில நிமிடங்கள் இறாலை வேக வைக்க வேண்டும்.
* இறால் வெந்ததும், நெருப்பை அதிகரித்து, இறாலை நன்கு பொன்னிறமாக ரோஸ்ட் செய்து இறக்கினால், சுவையான கேரளா ஸ்பெஷல் இறால் ரோஸ்ட் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
