Latest Updates
-
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
கத்திரிக்காயும், உருளைக்கிழங்கும் இருக்கா? அப்ப இந்த மாதிரி பருப்பு குழம்பு செய்யுங்க... செமயா இருக்கும்..
Kathirikkai Paruppu Kuzhambu Recipe In Tamil: தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான குழம்பு செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில கத்திரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு இருந்தால், அவற்றைக் கொண்டு பருப்பு குழம்பு செய்யுங்கள். இந்த கத்திரிக்காய் பருப்பு குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும்.
உங்களுக்கு கத்திரிக்காய் பருப்பு குழம்பு எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் பருப்பு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* பெரிய உருளைக்கிழங்கு - 2
* கத்திரிக்காய் - 3
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 3 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* துவரம் பருப்பு - 1/2 கப் (1 மணிநேரம் நீரில் ஊற வைக்கவும்)
* தண்ணீர் - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், உருளைக்கிழங்கை சேர்த்து 5 நிமிடம் வறுக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் கத்திரிக்காயையும் துண்டுகளாக்கி சேர்த்து வறுத்து,
தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் உள்ள மீதமுள்ள எண்ணெயில், வெங்காயத்தை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை
வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கரம் மசாலா, சீரகத் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள்
சேர்த்து நன்கு கிளறி, அதன் பின் தக்காளியை சேர்த்து 2-3 நிமிடம் வேக
வைக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், ஊற வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து,
அத்துடன் 2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி
வைத்து துவரம் பருப்பை வேக வைக்க வேண்டும். பருப்பு வேக 1/2 மணிநேரம்
ஆகும். ஒருவேளை உங்களுக்கு வேகமாக பருப்பு வேக வேண்டுமானால்,
குக்கரில் போட்டு 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ளலாம்.
* பருப்பு நன்கு மென்மையாக வெந்ததும், வறுத்து வைத்துள்ள காய்கறிகளை
சேர்த்து, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி,
மூடி வைத்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்க வேண்டும்.
* பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய்
சேர்த்து சூடானதும், சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயம், பூண்டு
மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறி நன்கு வதங்கியதும், மிளகாய் தூளை
சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கி, குழம்பின் மேல் ஊற்றி கிளறினால்,
சுவையான கத்திரிக்காய் பருப்பு குழம்பு தயார்.
Image Courtesy: madrassamayal



Click it and Unblock the Notifications
