மதியம் 10 நிமிடத்தில் சமையலை முடிக்கணுமா? அப்ப இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் மசாலா செய்யுங்க..

Posted By:

Kathirikkai Murungakkai Masala Recipe In Tamil: மதிய வேளையில் சாம்பார், குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? சட்டென்று மதிய சமையலை முடிக்க வேண்டுமா? உங்கள் வீட்டில் கத்திரிக்காயும், முருங்கைக்காயும் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டு காய்கறிகளையும் கொண்டு வாய்க்கு ருசியாக மசாலா செய்து சாப்பிடுங்கள்.

இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் மசாலாவை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், சுவை பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த மசாலா 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இந்த மசாலாவை ஒருமுறை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், வாரம் ஒருமுறை இந்த மசாலாவை செய்யுமாறு கேட்பார்கள்.

Kathirikkai Murungakkai Masala How To Make Brinjal Drumstick Masala

உங்களுக்கு இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் முருங்கைக்காய் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* சோம்புத் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்தது)
* முருங்கைக்காய் - 1 (நறுக்கியது)
* கத்திரிக்காய் - 1/4 கிலோ (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சோம்புத் தூள், மிளகுத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய முருங்கைக்காய், கத்திரிக்காயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, சிறிது நீரை ஊற்றி நன்கு கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான கத்திரிக்காய் முருங்கைக்காய் மசாலா தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, November 20, 2026, 13:26 [IST]
Desktop Bottom Promotion