Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
கத்தரிக்காயை வைச்சு இப்படி ஒரு ஈஸியான மோர் குழம்பு செய்யுங்க... ஹோட்டல் டேஸ்ட்ட விட செமையா இருக்கும்...!
Kathirikai Mor Kuzhambu Recipe in Tamil: மோர் குழம்பு பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பிடித்த ஒரு குழம்பாகும், வெகு சிலருக்கு இது பிடிக்காது. அதே போல் தான் கத்தரிக்காயும் நிறைய பேருக்கு பிடிக்காது. பெரும்பாலும் குழந்தைகளும் கத்தரிக்காய் சாப்பிட விரும்பமாட்டார்கள். இதை அனைவருக்கும் பிடித்தார் போலவும், எளிதாகவும், குறிப்பாக மிக விரைவாகவும் செய்ய முடியும். எப்படி கத்திரிக்காய் மோர் குழம்பு சட்டுன்னு செய்யறதுன்னு இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- கத்தரிக்காய் - 3 சிறியது (Eggplant)
- எண்ணெய் - தேவையான அளவு
- சீரகத்தூள் - ¼ டீ ஸ்பூன்
- தயிர் - ஒரு கப்
- உப்பு - தேவையான அளவு

மேரினேட் செய்ய:
- மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - ¾ டீ ஸ்பூன்
- சீரகத்தூள் - ¼ டீ ஸ்பூன்
- உப்பு - ½ டீ ஸ்பூன்
தாளிக்க:
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- வரமிளகாய் - 4
- சின்ன வெங்காயம் - 8
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- கடலைப்பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
செய்முறை:
- சூடான நீரில் மஞ்சள்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து கத்திரிக்காயை
போட்டு இரண்டு நிமிடங்களுக்கு வைக்கவும்.
- பின் கத்தரிக்காயை வட்ட வடிவில் மெலிதான துண்டுகளாக நறுக்கி
கொள்ளவும்.
- அதனுடன் மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் மற்றும் உப்பு
சேர்த்து நன்றாக கலந்து ½ மணி நேரத்திற்கு ஊற விடவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் ¼ டீ ஸ்பூன் சீரகத்தூளை
சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும்.
- தயிருடன் உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து
கொள்ளவும்.
- பின் அதனுடன் வறுத்து வைத்த சீரகத்தூளை சேர்த்து கலந்து
கொள்ளவும்.
- தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து காயவிடவும்.
- பின் ஊற வைத்த கத்தரிக்காயை சேர்த்து நன்கு வேக விடவும்.
- திருப்பிவிட்டு தேவைப்பட்டால் எண்ணெய் சேர்த்து இன்னொரு புறமும் வேக
விடவும்.
- வேகவைத்து எடுத்த கத்திரிக்காயை தயிருடன் சேர்த்து நன்கு கலந்து
கொள்ளவும்.
- சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து
காயவிடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- பின் அதில் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து மிதமான
தீயில் பொன்னிறமாக வறுக்கவும்.
- அதனுடன் வரமிளகாயை காம்புகளை நீக்கி விட்டு இரண்டு மூன்றாக கிள்ளி
சேர்த்து கொள்ளவும்.
- கடைசியாக பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து அடுப்பை
அணைக்கவும். இதை தயிருடன் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து காயவிடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாய்த்தூளை
சேர்த்து 2 நிமிடங்களுக்கு வைக்கவும்.
- பின் அதை தயிருடன் கலந்தால் சுவையான கத்திரிக்காய் மோர் குழம்பு
ரெடி!
- காரம் குறைவாக சாப்பிட விரும்புபவர்கள் மிளகாய்த்தூள் தாளிப்பை
தவிர்த்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications