Latest Updates
-
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும்
Kathirikai Milagu Kuzhambu Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் சாம்பார் அல்லது புளிகுழம்புதான் தினமும் மதியம் பிரதான குழம்பாக இருக்கும். ஒரே மாதிரியான புளிக்குழம்பு, சாம்பார் செய்வது சாப்பிடுபவர்களுக்கு மட்டுமின்றி சமைப்பவர்களுக்கும் நாளடைவில் போரடித்து விடும். அப்படியானால் செட்டிநாடு ரெசிபிக்களை முயற்சி செய்து பாருங்கள். குறிப்பாக கத்திரிக்காய் மிளகு குழம்பை முயற்சி செய்து பாருங்கள். தற்போது இணையதளத்தில் மிளகு குழம்பு மிகவும் ட்ரெண்டாகி வருவதால் அதனுடன் கத்திரிக்காயை சேர்த்து இந்த ஸ்டைலில் குழம்பு செஞ்சு பாருங்க.

இந்த கத்திரிக்காய் மிளகு குழம்பு சுவையானது மட்டுமல்ல மிகவும் ஆரோக்கியமானதும் கூட. சளி, காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் இந்த குழம்பை வைத்து சாப்பிடுவது நல்லது. இந்த கத்திரிக்காய் மிளகு குழம்பை ஒரு தடவை வைத்து விட்டால் போதும் 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம். இதை சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும். இது வழக்கமான மிளகு குழம்பு போல இருக்காது.
உங்களுக்கு செட்டிநாடு கத்திரிக்காய் மிளகு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் மிளகு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- கத்தரிக்காய் - 4 (நீளமாக நறுக்கியது)
- சின்ன வெங்காயம் - 15
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- கடுகு - ½ ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - ½ ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 2
- பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
- மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- வெல்லம் - 1 ஸ்பூன்
வறுத்து அரைக்க:
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- மிளகு - 1 ஸ்பூன்
- வெந்தயம் - அரை ஸ்பூன்
- வர மிளகாய் - 3
- தேங்காய் - ¼ கப்
- மல்லித் தூள் - 2 ஸ்பூன்
- புளி - சிறிய எலுமிச்சை அளவு
செய்முறை:
- ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வறுக்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் புளியுடன் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்து தாளிக்கவும்..
- கடுகு பொரிந்ததும் உளுத்தம் பருப்பு, வர மிளகாய் மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்கு கிளறவும்.
- அதன்பின் சின்ன வெங்காயம் மற்றும் நறுக்கிய கத்தரிக்காயைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
- பின்னர் அரைத்த மசாலா விழுதை சேர்த்து நன்கு கிளறவும்.
- அதன்பின் தேவையான அளவு தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- கத்தரிக்காய் நன்கு வேகும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- நன்கு கொதித்ததும் வெல்லம் 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- குழம்பு நன்கு கெட்டியானதும் அடுப்பை அணைத்தால் சுவையான கத்திரிக்காய் மிளகு குழம்பு ரெடி.
- இதை சூடான சாதத்தில் ஊற்றி நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
