Latest Updates
-
2 ஸ்பூன் துவரம்பருப்பும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த கொங்கு காட்டா குழம்பை செய்யுங்க - செமையா இருக்கும் -
புரோஸ்டேட் வீக்கமும்.. புற்றுநோயும்.. ஆண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்! -
முகலாய பேரரசர் அக்பரின் ஒரேயொரு இந்து மருமகன் யார் தெரியுமா? அவர்கள் திருமணம் ஏன் நடந்தது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து ராகுவால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிக்காரர்கள் இவங்க தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
இட்லிக்கு இப்படி ஒருடைம் தண்ணி சட்னி செய்யுங்க.. எல்லாரும் ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
நவம்பர் 13, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் அடுத்த 40 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சனிபகவானின் ஆசியால் டிசம்பர் மாதம் முதல் 2027 வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
முட்டைக்கோஸ் இருந்தா இப்படி குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
புடலங்காய் வாங்குனா அதனுடன் பால் சேர்த்து நெல்லை ஸ்டைலில் பால் கூட்டு செய்யுங்க - அட்டகாசமா இருக்கும்
கருணைக்கிழங்கை இந்த பக்குவத்தில் வறுவல் செய்யுங்க.. மீன் வறுவல் மாதிரி டேஸ்ட்டா இருக்கும்..
Karunai Kizhangu Varuval Recipe In Tamil: மதிய வேளையில் சாம்பார் சாதத்திற்கு நன்கு பொருத்தமாக இருக்கும் ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் நாவிற்கு விருந்தளிக்கும் வகையில் ஒரு சுவையான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் கருணைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அந்த கருணைக்கிழங்கை வறுவல் செய்யுங்கள்.
அதுவும் சாதாரண வறுவலாக செய்யாமல், மீன் வறுவல் சுவையில் செய்யும் போது இன்னும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக கருணைக்கிழங்கு நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும். ஆனால் இந்த பக்குவத்தில் செய்யும் போது, அந்த நமைச்சல் எதுவும் இருக்காது. சொல்லப்போனால் இந்த முறையில் ஒருமுறை கருணைக்கிழங்கை செய்யும் போது, பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இந்த கருணைக்கிழங்கு வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருணைக்கிழங்கு வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* கருணைக்கிழங்கு - 300 கிராம் (மெல்லிய தட்டையான துண்டுகளாக்கிக்
கொள்ளவும்)
* தண்ணீர் - தேவையான அளவு
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கல் உப்பு - சிறிது
ஊற வைப்பதற்கு...
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* சோள மாவு - 1 1/2 டீஸ்பூன்
* பச்சரிசி மாவு - 1 1/2 டீஸ்பூன்
* புளி - 1/2 நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கருணைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, மெல்லிய தட்டையான
துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் மஞ்சள் தூள் மற்றும்
சிறிது உப்பு சேர்த்து, அத்துடன் நறுக்கிய கருணைக்கிழங்கை சேர்த்து, 5
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்பு அந்த கருணைக்கிழங்கை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அதில் காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா, சோள மாவு, பச்சரிசி
மாவு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் புளிச் சாற்றினை சிறிது சேர்த்து பிரட்டி, 30
நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு தவாவை அடுப்பில் வைத்து, ஊற வைத்துள்ள கருணைக்கிழங்கை
போட்டு மேலே எண்ணெய் ஊற்றி, மீனை ப்ரை செய்வது போன்று முன்னும்
பின்னும் திருப்பிப் போட்டு ப்ரை செய்து எடுத்தால், சுவையான
கருணைக்கிழங்கு வறுவல் தயார்.



Click it and Unblock the Notifications
