Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
கரும்புச்சாறு பொங்கல்
நீங்கள் கரும்பு பிரியர் என்றால், கரும்பைக் கொண்டு வித்தியாசமான ரெசிபிக்களைத் தயாரித்து சாப்பிட விரும்பினால், பொங்கல் ஸ்பெஷலாக கரும்புச்சாறு பொங்கல் செய்து சாப்பிடுங்கள்.
பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் மார்கெட்டில் எங்கு பார்த்தாலும் கரும்பை காணலாம். நீங்கள் கரும்பு பிரியர் என்றால், கரும்பைக் கொண்டு வித்தியாசமான ரெசிபிக்களைத் தயாரித்து சாப்பிட விரும்பினால், பொங்கல் ஸ்பெஷலாக கரும்புச்சாறு பொங்கல் செய்து சாப்பிடுங்கள். இந்த கரும்புச்சாறு பொங்கல் செய்வது மிகவும் சுலபம். மேலும் இது குக்கரில் செய்துவிடலாம் என்பதால் மாலை வேளையில் கூட செய்து சாப்பிடலாம்.

உங்களுக்கு கரும்புச்சாறு பொங்கல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கரும்புச்சாறு பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1/4 கப்
* பாசிப்பருப்பு - 1/8 கப்
* கரும்புச்சாறு - 1 1/2 கப்
* வெல்லம் - 1/8 கப்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - சிறிது
* உலர் திராட்சை - சிறிது
* ஏலக்காய் பொடி - சிறிது
செய்முறை:
* முதலில் கரும்பின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் அதை மிக்சரில் போட்டு சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்து, வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இதுப்போன்று 1 1/2 கப் அளவு கரும்பு சாற்றினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பைப் போட்டு லேசாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அரிசியை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பிறகு குக்கரில் கழுவிய அரிசி மற்றும் கரும்பு சாற்றினை எடுத்து, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி குறைவான தீயில் 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் வெல்லத்தை சேர்த்து அடுப்பில் வைத்து, நன்கு கரண்டியால் கிளறிவிட்டு வெல்லத்தை நன்கு கரைய வைக்க வேண்டும்.
* அதன் பின் ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி, உலர் திராட்சையைப் போட்டு வறுத்து, குக்கரில் உள்ள பொங்கலுடன் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கரும்புச்சாறு பொங்கல் தயார்.
குறிப்பு:
* வேண்டுமானால் ப்ளேவருக்கு இதில் பச்சை கற்பூரத்தை சேர்த்துக் கொள்ளலாம்.
* நீங்கள் பயன்படுத்தும் பச்சரிக்கு ஏற்றவாறு விசில் விட்டுக் கொள்ளுங்கள்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications