Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
மட்டன் வாங்குனா காரைக்குடி கறிக்குழம்பை ஒருடைம் செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்...
Karaikudi Mutton Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி மட்டன் வாங்குவீர்களா? அந்த மட்டனை எப்போதும் ஒரே மாதிரி தான் சமைத்து சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் மட்டன் குழம்பை வைத்து சாப்பிட விரும்புகிறீர்களா?
அப்படியானால் காரைக்குடி மட்டன் குழம்பை செய்யுங்கள். இந்த காரைக்குடி மட்டன் குழம்பு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, மிகவும் சுவையாகவும் இருக்கும். இந்த குழம்பு சாதம், இட்லி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு காரைக்குடி மட்டன் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காரைக்குடி மட்டன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 200 கிராம் (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மட்டன் - 1 1/4 கிலோ
* கல் உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1/2 லிட்டர்
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 5
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கசகசா - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், முந்திரி, சோம்பு,
கசகசா ஆகியவற்றை சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு
வதக்க வேண்டும்.
* பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பிறகு மட்டனை கழுவி சேர்த்து நன்கு கிளறி, நீர்விட்டு வரும் வரை வேக
வைத்து, உப்பு சேர்த்து கிளறி, குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு
கிளறி, நீரை ஊற்றி 10 நிமிடம் மூடி வைத்து மிதமான தீயில் வைத்து வேக
வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அரைத்து வைத்துள்ள தேங்காய்
விழுதை சேர்த்து கிளறி, உப்பு சுவை பார்த்து, மூடி வைத்து 10 நிமிடம்
நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான காரைக்குடி மட்டன் குழம்பு
தயார்.
Image Courtesy: SIMPLY SAMAYAL



Click it and Unblock the Notifications
