Latest Updates
-
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
வெங்காயம் சேர்க்காம வெறும் 3 பொருளை வெச்சு 5 நிமிடத்தில் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க...
Kara Chutney In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? சட்டுபுட்டென்று 5 நிமிடத்தில் ஒரு சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் உள்ளோர் எப்போதும் இட்லி, தோசைக்கு சற்று புளிப்பான மற்றும் காரமான சட்னியைத் தான் சாப்பிட நினைப்பார்களா? அப்படியானால் கார சட்னியை செய்யுங்கள். அதுவும் வெங்காயம் சேர்க்காத கார சட்னியை செய்யுங்கள். இந்த கார சட்னிக்கு 3 பொருட்கள் இருந்தாலே போதுமானது.

அந்த 3 பொருட்களையும் அரைத்து நல்லெண்ணெய் அதிகம் ஊற்றி தாளித்தால் போதும். இந்த சட்னியை நீங்கள் ஒருமுறை முயற்சித்தால், நிச்சயம் அடிக்கடி செய்வீர்கள். முக்கியமாக இது குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். குறிப்பாக வேலைக்கு செல்வோருக்கு ஏற்ற சட்னி இது.
உங்களுக்கு வெங்காயம் சேர்க்காத கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காயம் சேர்க்காத கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தக்காளி - 4
* வரமிளகாய் - 13
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் தக்காளியை வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் துண்டுகளாக்கப்பட்ட தக்காளி, வரமிளகாய்,
புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நீர் சேர்க்காமல் நன்கு
மென்மையாகும் வரை அரைக்க வேண்டும்.
* சட்னியை அரைத்த பின், அதை ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், 1 டீஸ்பூன் கடுகு மற்றும் 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* இறுதியாக தாளித்ததை சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கார
சட்னி தயார்.
Image Courtesy: Sailaja Kitchen



Click it and Unblock the Notifications
