Latest Updates
-
உடல் எடை மடமடன்னு குறைய உதவும் கருப்பு சுண்டல் தோசையும், பீட்ரூட் சட்னியும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 11 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டுமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் மே 14 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது... -
உங்களுக்கு திரும்ப திரும்ப ஒரே கனவு வருதா? அதுக்கு என்ன அர்த்தம்-ன்னு தெரியுமா? -
அன்னையர் தினம் 2026: அம்மாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கணுமா? இந்த UPI ஆஃபர்களை மிஸ் பண்ணிடாதீங்க! -
மாம்பழ லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அன்னையர் தினத்தில் மனைவி vs அம்மா? இந்த ஒரு சின்ன மாற்றம் போதும், குடும்பத்தில் அமைதி நிலவும்! -
முகத்தில் உள்ள அழுக்கை நீக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் வாஷ்களை யூஸ் பண்ணுங்க.. -
ஒரே வாரத்தில் 3 முறை நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்.. -
அன்னையர் தினத்தில் இந்த வாஸ்து செடிகளைப் பரிசளிங்க… அம்மாவின் ஆரோக்கியமும் செல்வமும் பல மடங்கு உயரும்!
ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Kalan Milagu Varuval Recipe In Tamil: மதியம் என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிக வேலை செய்யாமல் சட்டென்று ஒரு சைடு டிஷ் செய்ய நினைகிறீர்களா? உங்கள் வீட்டில் காளான் உள்ளதா? அப்படியானால் அந்த காளானைக் கொண்டு காளான் மிளகு வறுவலை செய்யுங்கள்.
இந்த மிளகு வறுவல் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதுவும் சளி, இருமல் இருப்பவர்கள் மிளகை உணவில் அதிகம் சேர்க்கும் போது, விரைவில் அதிலிருந்து விடுபடலாம். முக்கியமாக இந்த காளான் மிளகு வறுவல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு காளான் மிளகு வறுவல் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காளான் மிளகு வறுவல ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காளான் - 200 கிராம்
* அரிசி மாவு/ சோள மாவு - சிறிது
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* பிரியாணி இலை - 1
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் காளானை அரிசி மாவு அல்லது சோள மாவு சேர்த்து நன்கு
தேய்த்து, நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த காளானை உங்களுக்கு விருப்பமான அளவில் துண்டுகளாக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சீரகம், சோம்பு
சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர்
ஜாரில் அல்லது அம்மி கல்லில் போட்டு நன்கு பொடி செய்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி, சூடானதும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, மஞ்சள்
தூள் சேர்த்து கிளறி, கழுவி வைத்துள்ள காளானை சேர்த்து நன்கு கிளறி
விட்டு, மூடி வைத்து 4-5 நிமிடம் வேக வைக்க வேண்டும். நீர் சேர்க்க
தேவையில்லை. ஏனெனில் காளானே நீர் விடும்.
* காளான் நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து
நன்கு 2 நிமிடம் கிளறி, கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால்,
சுவையான காளான் மிளகு வறுவல் தயார்.
Image Courtesy: Traditionally Modern Food



Click it and Unblock the Notifications











