Latest Updates
-
செவ்வாயால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிகளின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
ப்ளீச்சிங் செஞ்ச மாதிரி முகம் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
September Matha Rasipalan 2026: செப்டம்பரில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
ஆசிரியையின் ஒரு அறை.. உயிரிழந்த சிறுவன்! இது எப்படி சாத்தியம் என்பது குறித்து விளக்கும் டாக்டர்! -
1/2 கிலோ மட்டன் வெச்சு.. இப்படி ஒருவாட்டி மசாலா அரைச்சு பிரியாணி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
கையேந்தி பவன் கெட்டி கார சட்னியை எப்படி செய்றதுன்னு பாருங்க.. இட்லிக்கு செம டேஸ்ட்டா இருக்கும்...
Kaiyendhi Bhavan Kara Chutney Recipe In Tamil: இன்று காலை உங்கள் வீட்டில் இட்லி செய்ய திட்டமிட்டிருக்கிறீர்களா? அந்த இட்லிக்கு என்ன சட்னி செய்றதுன்னு தெரியலையா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு காரமாகவும், புளிப்பாகவும் சட்னி சாப்பிட பிடிக்குமா?
அப்படியானால் கையேந்தி பவன் கெட்டி கார சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி கையேந்தி பவன் கடையில் மிகவும் பிரபலமான சட்னி. இந்த சட்னியை இட்லியுடன் சாப்பிட்டால், சும்மா அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னியை செய்வது ரொம்பவும் ஈஸி.

உங்களுக்கு கையேந்தி பவன் கெட்டி கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கையேந்தி பவன் கெட்டி கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் - 6
* பூண்டு - 10 பல்
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - ஒரு துண்டு
* பெரிய தக்காளி - 2 (நறுக்கியது)
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின் வெங்காயத்தைப் போட்டு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு சுவைக்கேற்ப உப்பு மற்றும் புளி சேர்த்து சிறிது நேரம் கிளறி
விட வேண்டும்.
* பிறகு தக்காளியை சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாக வதங்கும் வரை
வதக்கி விட வேண்டும்.
* தக்காளி வதங்கியதும், அடுப்பை அணைத்துவிட்டு, 10 நிமிடம் மூடி வைக்க
வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்துக் கொண்டு, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிக்க எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்
தூள் சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான
கையேந்தி பவன் கெட்டி கார சட்னி தயார்.
Image Courtesy: Sharmis Passions



Click it and Unblock the Notifications