Latest Updates
-
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா?
சைடு டிஷ் ஏதும் செய்யாம தோசை சாப்பிடணுமா? அப்ப கடப்பா கார தோசையை செய்யுங்க...
Kadappa Karam Dosa Recipe In Tamil: தினமும் காலையில் வெறும் தோசை செய்து, சட்னி, சாம்பார் தொட்டு சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் இன்று சற்று வித்தியாசமாக ஆந்திராவில் ராயல்சீமா பகுதியில் மிகவும் பிரபலமான கடப்பா காரம் தோசையை வீட்டில் செய்து சாப்பிடுங்கள்.
இந்த தோசைக்கு தனியாக ஒரு பொடியை அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு கார சட்னியை தயார் செய்து கொள்ள வேண்டும். அடுத்து தோசையை சுட்டு, மேலே சட்னியை பரப்பி, பொடியைத் தூவி எடுக்க வேண்டும். இந்த தோசைக்கு சைடு டிஷ் எதுவும் தேவையில்லை. ஒருவேளை செய்ய நினைத்தால், சாம்பார் செய்யலாம். இப்படி உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒருமுறை தோசையை சுட்டுக் கொடுத்தால், அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள்.

உங்களுக்கு கடப்பா காரம் தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கடப்பா காரம் தோசையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தோசை மாவு - தேசையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு
பொடிக்கு..
* பொட்டுக்கடலை - 1/3 கப்
* பூண்டு - 2 பல்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
சட்னிக்கு...
* வரமிளகாய் - 6
* பெரிய வெங்காயம் - 1
* பூண்டு - 3 பல்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் வரமிளகாயை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை, பூண்டு, உப்பு ஆகியவற்றை
சேர்த்து நன்கு அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் ஊற வைத்துள்ள வரமிளகாய், வெங்காயம், சீரகம்,
பூண்டு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* அடுத்து தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தோசை மாவைக்
கொண்டு தோசை ஊற்றி, 1 நிமிடம் கழித்து, மேலே அரைத்து வைத்துள்ள
சட்னியை பரப்பி, அதன் மேல் பொட்டுக்கடலை பொடியைத் தூவி, எண்ணெய்
ஊற்றி, தோசையை திருப்பி போடாமல், அப்படியே மடித்து எடுத்தால், சுவையான
கடப்பா காரம் தோசை தயார்.
Image Courtesy: Cooking From Heart



Click it and Unblock the Notifications
