Latest Updates
-
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
10 நிமிடத்தில் கடப்பா கார சட்னியை எப்படி செய்யணும் தெரியுமா?
Kadappa Kara Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு ஒரு அட்டகாசமான, அதே சமயம் சற்று காரமான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கடப்பா கார சட்னியை செய்யுங்கள். இந்த கார சட்னிக்கு 5 பொருள் இருந்தா போதும், ஈஸியாக செய்திடலாம்.
வேலைக்கு செல்பவர்கள் டக்கென்று சட்னி செய்ய நினைத்தால், அதற்கு இந்த சட்னி ஏற்றதாக இருக்கும். ஏனெனில் அந்த அளவில் இது 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு சிம்பிளாகவும், ருசியாகவும் இருக்கும்.

உங்களுக்கு கடப்பா கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கடப்பா கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பூண்டு - 5 பல்
* வரமிளகாய் - 5 வரமிளகாய்
* புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
* சின்ன வெங்காயம் - 12
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெரிய தக்காளி - 1 (அரைத்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பூண்டு, வரமிளகாய், புளி சேர்த்து சற்று
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 10-12 சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து பச்சை வாசனை போக
வதக்க வேண்டும். வெங்காயம் வதங்குவதற்குள் மிக்சர் ஜாரில் தக்காளியை
சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* வெங்காயம் பச்சை வாசனை போக வதங்கியதும், அதில் அரைத்து வைத்துள்ள
தக்காளியை சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள்
சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக சட்னியில் சிறிது நீரை ஊற்றி, ஒரு 2 நிமிடம் கொதி வைத்து
இறக்கினால், சுவையான கடப்பா கார சட்னி தயார்.
Image Courtesy: Padhuskitchen



Click it and Unblock the Notifications
