Latest Updates
-
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
1 கப் இட்லி மாவும், 1 கப் கடலைப்பருப்பும் இருந்தால் டக்குனு இந்த இனிப்பை செய்யுங்க..டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
Kadalai Paruppu Suzhiyam Recipe in Tamil: மாலை நேரம் வந்தாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏதாவது சாப்பிட வேண்டுமென்ற ஆசை வரும். அதிலும் பள்ளி முடித்து வரும் குழந்தைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்கள் நிச்சயம் ஏதாவது சாப்பிட கொடுக்க வேண்டும். அப்படி குழந்தைகளின் பசியை போக்கும் வகையில் ஒரு அருமையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் 1 கப் கடலைப்பருப்பும், 1 கப் இட்லி மாவும் இருந்தால், இந்த சுவையான சுழியத்தை செய்து கொடுங்கள். முக்கியமாக இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு அட்டகாசமான சுவையில் இருக்கும். முக்கியமாக கடலைப்பருப்பை முன்கூட்டியே ஊறவைத்து விட்டால் போதும் சில நிமிடங்களிலேயே இந்த அட்டகாசமான இனிப்பை செய்து விடலாம்.

உங்களுக்கு இந்த கடலைப்பருப்பு சுழியத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொட்டுக்கடலை சுழியம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- புளிக்காத இட்லி மாவு - ஒரு கப்
- கடலைப் பருப்பு - ஒரு கப்
- தேங்காய்த் துருவல் - அரை கப்
- ஏலக்காய்ப் பொடி - அரை ஸ்பூன்
- சுக்குப்பொடி - அரை டீஸ்பூன்
- நெய் - ஒரு டீஸ்பூன்
- பொடித்த வெல்லம் - 200 கிராம்
- உப்பு - சிறிதளவு
செய்முறை:
- இந்த சுழியத்தை செய்வதற்கு முதலில் செய்ய வேண்டியது கடலைப்பருப்பை ஊற வைப்பதுதான்.
- கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து நன்கு கழுவி விட்டு குக்கரில் போட்டு முக்கால் பதம் வேகும் வரை வேகவைத்து தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு சூடாக்கி அதில் தேங்காய்த் துருவலை இரண்டு நிமிடங்கள் வதக்கி எடுக்கவும்.
- முக்கால் பதம் வேகவைத்த கடலைப்பருப்பை தண்ணீர் எதுவும் சேர்க்காமல் மிக்ஸியில் பொடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு அதை பாத்திரத்தில் போட்டு அதனுடன் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, வறுத்த தேங்காய்த் துருவல், பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும்.
- பின்னர் இந்த கலவையை உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளவும்.
- இட்லி மாவில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பின்னர் தயாரித்து வைத்துள்ள கடலைப்பருப்பு உருண்டைகளை இட்லி மாவில் முக்கியெடுத்து எண்ணெயில் நன்கு சிவக்கும் படி பொரித்தெடுக்கவும்.
- டெல்டா மாவட்டங்களில் மிகவும் பிரபலமான இந்த இனிப்பு செய்வதற்கு எளிமையாகவும், சுவையாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
