Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
1 கப் ஜவ்வரிசி இருந்தா ஈவ்னிங் டைம்-ல இப்படி மொறுமொறுப்பான வடை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Javvasiri Vada Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் எப்போதும் சாப்பிட ஸ்நாக்ஸ் கேட்பார்களா? பெரும்பாலும் உங்கள் வீட்டில் ஈவ்னிங் நேரத்தில் வடை தான் செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான வடை சுடாமல், இன்று வீட்டில் ஜவ்வரிசி இருந்தால், அதைக் கொண்டு மொறுமொறுப்பான வடை சுடுங்கள். இந்த ஜவ்வரிசி வடை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.
உங்களுக்கு ஜவ்வரிசி வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஜவ்வரிசி வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்ற எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* ஜவ்வரிசி - 1 கப்
* உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து தோலுரித்தது)
* வறுத்த வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 துண்டு
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு கப் ஜவ்வரிசியை நீரில் 2 முறை அலசிவிட்டு, ஒரு கப்
நீரை ஊற்றி 2 மணிநேரம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* 2 மணிநேரம் கழித்து பார்த்தால் ஜவ்வரிசி நன்கு ஊறி, கையால்
நசுக்கினால் எளிதில் மசியும் அளவில் இருக்கும்.
* அதன் பின் அந்த ஜவ்வரிசியுடன் வேக வைத்து தோலுரித்து வைத்துள்ள
உருளைக்கிழங்குகளை கைகளால் மசித்தோ அல்லது துருவியோ சேர்க்க
வேண்டும்.
* அடுத்து அதில் 1/2 டீஸ்பூன் உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,
இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் சோம்பு தூள்
சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும். முக்கியமாக நீர்
சேர்க்கக்கூடாது.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம்
கொஞ்சமாக எடுத்து வடைகளாக தட்டி எண்ணெய் போட்டு, மிதமான தீயில்
வைத்து, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ஜவ்வரிசி வடை தயார்.
Image Courtesy: Traditionally Modern Food



Click it and Unblock the Notifications
