Latest Updates
-
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஸ்கூல் முடிந்து பசியுடன் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஜவ்வரிசி வெச்சு இப்படி ஒருமுறை செஞ்சு கொடுங்க..
Javvarisi Urundai Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு சத்தான, அதே சமயம் அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ஜவ்வரிசி உள்ளதா?
அப்படியானால் அந்த ஜவ்வரிசியைக் கொண்டு ஒரு அருமையான ஸ்வீட் செய்து கொடுங்கள். அதுவும் தேங்காயை உள்ளே வைத்து உருண்டை பிடித்து, வேக வைத்து, சர்க்கரை பாகுவில் ஊற வைத்து கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதோடு, அவர்களின் பசியும் அடங்கும்.

உங்களுக்கு இந்த ஜவ்வரிசி உருண்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஜவ்வரிசி உருண்டையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஜவ்வரிசி - 200 கிராம்
* சுடுநீர் - தேவையான அளவு
* உப்பு - 1/4 டீஸ்பூன்
உள்ளே வைப்பதற்கு...
* தேங்காய் - 1/4 மூடி
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை பாகுவிற்கு...
* சர்க்கரை - 200 கிராம்
* தண்ணீர் - தேவையான அளவு
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை போட்டு, சுடுநீர் சேர்த்து
கரண்டியால் கிளறி, அத்துடன் சிறிது உப்பு தூவி நன்கு கிளறி, 2
மணிநேரம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் தேங்காயை எடுத்து துருவிக் கொள்ள வேண்டும்.
* பின் துருவிய தேங்காயை கிண்ணத்தில் எடுத்து, அத்துடன் ஏலக்காய் தூள்
மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும்.
* 2 மணிநேரம் ஆன பின், ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை கையால் லேசாக
பிசைந்து, பின் சிறிது ஜவ்வரியை எடுத்து அதை தட்டையாக தட்டி, அதன்
நடுவே சிறிது தேங்காய் கலவையை வைத்து மூடி உருண்டையாக பிடித்து, ஒரு
தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் ஒரு 6-7 ஜவ்வரிசி
உருண்டைகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். உருண்டை பிடிக்கும் போது
அதிகமாக அழுத்தம் கொடுக்க வேண்டாம். இல்லாவிட்டால் கல் போன்று
இருக்கும்.
* பின்பு இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர்
நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி இந்த
உருண்டைகளை உள்ளே வைத்து, மூடி வைத்து 20 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் சர்க்கரை
மற்றும் பாகுவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சிறிது ஏலக்காய் தூள்
சேர்த்து, சர்க்கரையை கரைத்துக் கொள்ள வேண்டும்.
* ஜவ்வரிசி வெந்ததும், அந்த உருண்டைகளை எடுத்து சர்க்கரை பாகுவில்
போட்டு, 2 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இந்த
ஜவ்வரிசி உருண்டையை பரிமாறும் போது, மேலே சிறிது சர்க்கரை பாகுவை
ஊற்றி பரிமாறுங்கள். இப்போது ஜவ்வரிசி உருண்டை தயார்.
Image Courtesy: Sharmis Passions



Click it and Unblock the Notifications