Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
1 கப் ஜவ்வரிசியும், 1/4 கப் வேர்க்கடலையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படி வடை செஞ்சு பாருங்க.. சுவையோ சும்மா அள்ளும்!
Javvarisi Peanut Vada Recipe In Tamil: மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது நன்கு சூடாகவும், மொறுமொறுவென்றும் ஏதாவது சாப்பிட தோன்றும். அதுவும் மாலை நேர ஸ்நாக்ஸ் என்றாலே வடை தான் அனைவருக்கும் நினைவில் வரும். அதுவும் வடை என்றால் பருப்பு வடை, உளுந்து வடை என்று தான் செய்து சாப்பிடுவோம்.
ஆனால் சற்று வித்தியாசமாக ஏதாவது ஒரு வடையை செய்து சாப்பிட விரும்பினால், உங்கள் வீட்டில் ஜவ்வரிசி உள்ளதா? அப்படியானால் அந்த ஜவ்வரிசியுடன், வேர்க்கடலையை சேர்த்து ஒரு சுவையான மற்றும் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸை செய்யுங்கள். இந்த ஜவ்வரிசி வடையானது சட்டென்று செய்யக்கூடிய வகையில் செய்வதற்கு சுலபமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்க்ளுக்கு ஜவ்வரிசி வேர்க்கடலை வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஜவ்வரிசி வேர்க்கடலை வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஜவ்வரிசி - 1 கப்
* உருளைக்கிழங்கு - 1
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் 1 கப் ஜவ்வரிசியை நீரில் ஒருமுறை கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் 1 கப் நீரை ஊற்றி, மூடி வைத்து 3-4 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* பின்பு வேர்க்கடலையை லேசாக ஒருமுறை வறுத்து இறக்கி குளிர வைத்துக்
கொள்ள வேண்டும். பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு லேசாக ஒருமுறை
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு உருளைக்கிழங்கை துருவி நீரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியில் உள்ள நீரை வடித்துவிட்டு
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் துருவிய உருளைக்கிழங்கை போட்டு, அத்துடன் பொடியாக
நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், சீரகம்
ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடித்த வேர்க்கடலை, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு
சுவைக்கேற்ப சேர்த்து, நீர் ஊற்றாமல் நன்கு அழுத்தம் கொடுத்து பிசைய
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை சிறிது
எடுத்து, வடை போன்று தட்டையாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக
பொரித்து எடுக்க வேண்டும. இதேப் போன்று அனைத்து மாவையும் பொரித்து
எடுத்தால், சுவையான ஜவ்வரிசி வேர்க்கடலை வடை தயார்.
Image Courtesy: Piping Pot Curry



Click it and Unblock the Notifications