Latest Updates
-
18 ஆண்டுகளுக்கு பின் கடகம் செல்லும் கேது: இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிந்து அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
மணமணக்கும்.. தட்டப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
டியோடரண்ட், ப்ரா, ஹேர் டை - மார்பக புற்றுநோயை ஏற்படுத்துமா? - விளக்கும் மார்பகப் புற்றுநோய் நிபுணர்! -
சனி பகவான் ஆசியால் அடுத்த 118 நாட்கள் இந்த 5 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா இருப்பாங்க.. உங்க ராசி என்ன? -
இட்லி, தோசைக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை செய்யுங்க.. வழக்கத்தை விட 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
அக்டோபர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 19-ல் சுக்கிரன் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்.. -
ராகுவின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
உடுப்பி ஸ்டைல் கொள்ளு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு சாப்பிடுங்க - எடை டக்குனு குறையும் -
ஒரே ஃபேஸ் பேக்கில் முகம் பளிச்சுன்னு ஆகணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் பேக் போடுங்க..
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க
Iyengar Style Sutta Kathirikai Masiyal Recipe in Tamil: ஐயங்கார் ஸ்டைல் உணவுகள் என்றாலே அதற்கு தனி சுவைதான். கத்திரிக்காயை பொதுவாக சாம்பார் அல்லது பொரியல் செய்துதான் வழக்கம். அதனால்தான் என்னவோ பெரும்பாலான மக்களுக்கு கத்திரிக்காய் பிடிப்பதில்லை. உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் கத்திரிக்காய் பிடிக்காதா? அப்படியென்றால் இந்த ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியலை செஞ்சு பாருங்க. இந்த ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் செய்வதற்கு மிகவும் எளிதானது மற்றும் சுவையானது. இதை சைடிஷாகவும் சாப்பிடலாம், மெயின் டிஷ்ஷாவும் சாப்பிடலாம்.

உங்களுக்கு ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழெ ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 பெரிய கத்தரிக்காய்
- சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
- 1 தக்காளி (பொடியாக நறுக்கியது)
- 2 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 5 பூண்டுப் ல்
- 1 வர மிளகாய்
- 2 பச்சை மிளகாய்
- 2 கொத்து கறிவேப்பிலை
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1 இன்ச் அளவு புளி
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- சிறிது பெருங்காயத் தூள்
- சிறிது கொத்தமல்லி இலைகள்
- 2 டேபிள் ஸ்பூன் நெய்
செய்முறை:
- கத்திரிக்காயை கத்தியால் 4 முதல் 5 இடங்களில் குத்திவிடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து 5-7 நிமிடங்கள் சுட்டு, அதன் உட்பகுதி நன்கு வேகும் வரை வைக்கவும்.
- பின்னர், தோல் சுருங்கும் வரை அதிக தீயில் 10-15 நிமிடங்கள் சுடவும்.
- கத்திரிக்காய் ஆறியதும் அதன் தோலை நீக்கிவிட்டு, உள்ளே இருக்கும் சதைப்பகுதியை ஒரு கத்தியைப் பயன்படுத்திச் சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
- ஒரு வாணலியில் 2-3 மேசைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். கடுகு சேர்த்து அது வெடிக்கத் தொடங்கியதும், உளுத்தம் பருப்பு, சீரகம் மற்றும் வர மிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- உளுத்தம் பருப்பு பொன்னிறமாக மாறியதும், கறிவேப்பிலை, பெருங்காயம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் நறுக்கிய சின் வெங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- வெங்காயத்தை பொன்னிறமாக மாறியதும், நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- தக்காளி நன்கு குழைந்து, ஓரங்களில் எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
- அதன்பின் நறுக்கிய கத்தரிக்காய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். நன்கு கலந்து, கத்தரிக்காய் முழுமையாக வெந்து குழைந்து வரும் வரை மூடி வைத்து 5 நிமிடங்கள் சமைக்கவும்.
- அதன்பின் புளிக்கரைசலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- புளி பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைக்கவும். கலவை சூடாக இருக்கும்போதே அதை பருப்பு மத்து வைத்து நன்கு மசிக்கவும்
- இறுதியாக கொத்தமல்லி இலை தூவி கிளறவும்.
- சாதத்தில் சிறிதளவு நெய் ஊற்றி இந்த கத்திரிக்காய் மசியலை சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
