Latest Updates
-
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. -
உங்ககிட்ட இந்த 7 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்க உடல் ஆரோக்கியமா இல்லன்னு அர்த்தம்.. உஷார்.. -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் இருக்கும் ஆண்களிடம் பெண்கள் எளிதில் மயங்கி விடுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா -
150 ஆண்டுகளுக்கு பின் பௌர்ணமியில் உருவாகும் 2 யோகங்கள்: இன்று இந்த 5 ராசியின் அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
கோதுமை ரவா பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 29 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப பதட்டமான நாளாக இருக்குமாம் -
ஜூன் 30-ல் நிகழும் ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் ஆபத்துகளையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
10 பாதமும், 1 குடைமிளகாயும் இருந்தா இந்த ஆந்திரா சட்னியை அரைங்க - டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும் -
ஜூன் 29 ஸ்ட்ராபெர்ரி நிலவு அன்று நிகழும் புதன் வக்ர பெயர்ச்சி இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகுதாம் -
Strawberry Moon 2026: ஸ்ட்ராபெரி நிலவு எப்போது வருகிறது? இந்தியாவில் எந்த நேரத்தில் இது பிரகாசமாக தெரியும்?
ஐயங்கார் ஸ்டைல் கதம்ப சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் கூட இந்த சுவை கிடைக்காது
Iyengar Style Kadamba Sadam Recipe in Tamil: ஒவ்வொரு நாளும் என்ன சமைப்பது என்பதுதான் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை. தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்து போரடித்துவிட்டதா? அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிக்களை வீட்டில் செய்து சுவைக்க விரும்புவீர்களா? அப்படியென்றால் ஐயங்கார் ஸ்டைலில் ஒருமுறை கதம்ப சாதத்தை முயற்சி செய்து பாருங்கள்.

பொதுவாக ஐயங்கார் ஸ்டைல் ரெசிபி என்றாலே அதற்கு தனித்துவமான ருசியும், மணமும் இருக்கும் என்று கூறுவார்கள். இந்த கதம்ப சாதமும் அதற்கு விதிவிலக்கல்ல. லெமன் சாதம், தக்காளி சாதம் என்று சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இந்த கதம்ப சாதம் புதுவிதமான அனுபவத்தைக் கொடுக்கும். இந்த ஸ்டைல் வெரைட்டி சாதம் செய்வதற்கு எளிதானது, இதன் சுவையும் மிகவும் தனித்துவமானதாக இருக்கும்.
உங்களுக்கு ஐயங்கார் ஸ்டைல் கதம்ப சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழெ ஐயங்கார் ஸ்டைல் கதம்ப சாத ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1.5 கப் அரிசி
- 1/2 கப் துவரம் பருப்பு
- 1 உருளைக்கிழங்கு
- 2 சிறிய கேரட்
- 50 கிராம் பீன்ஸ்
- 50 கிராம் அவரைக்காய்
- 1/2 வாழைக்காய்
- 1/2 கப் வேகவைத்த பட்டாணி
- ஒரு கைப்பிடி அளவு ஊறவைத்த வேர்க்கடலை
- 2 கொத்து கறிவேப்பிலை
- 3 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 2 ஸ்பூன் நெய்
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள்
- தேவையான அளவு உப்பு
- 2 கப் புளிக் கரைசல்
- 2 ஸ்பூன் பொடித்த வெல்லம்
- ஒரு கைப்பிடி அளவு வறுத்த சுண்டைக்காய்
தாளிக்க:
- 1/2 டீஸ்பூன் வெந்தயம்
- 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 ஸ்பூன் தனியா
- 5 காய்ந்த மிளகாய்
- 1 டீஸ்பூன் மிளகு
- சிறிது கறிவேப்பிலை
- 3 ஸ்பூன் துருவிய தேங்காய்
செய்முறை:
- அரிசி மற்றும் பருப்பை நன்றாகக் கழுவி குக்கரில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து அவை நன்கு மென்மையாகவும் குழைவாகவும் ஆகும் வரை வேகவைக்கவும்.
- சாதம் மற்றும் பருப்புடன் சிறிது நெய் மற்றும் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து, அவை நன்கு மசியும் வரை நன்றாகக் குழைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் சுமார் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அரைக்கத் தேவையான அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக வறுக்கவும். பருப்பு வகைகள் லேசான பொன்னிறமாகவும், மற்ற பொருட்கள் மொறுமொறுப்பாகவும் மாறும் வரை வறுக்க வேண்டும்.
- பின்னர் அடுப்பை அணைத்து இதை ஆற வைத்து மிக்சி ஜாரில் போட்டு மென்மையான பொடியாக அரைக்கவும்.
- ஒரு பெரிய பாத்திரத்தில், சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அனைத்து காய்கறிகளையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பின்னர் மஞ்சள் தூள், உப்பு மற்றும் சுமார் 1 கப் தண்ணீர் சேர்த்து, காய்கறிகள் பாதி வெந்ததும் இறக்கவும்.
- அதன்பின் புளிக் கரைசல், வெல்லம் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து, புளியின் பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்கவிடவும்.
- இந்த நிலையில், வேகவைத்த வேர்க்கடலை மற்றும் பட்டாணி ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- பிறகு, கட்டிகள் ஏதுமின்றி நன்கு கலக்குமாறு மசித்து வைத்துள்ள சாதம் மற்றும் பருப்புக் கலவையைச் சேர்க்கவும். கலவை மிகவும் கெட்டியாக இருந்தால் சுமார் அரை கப் தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து 3-4 நிமிடங்கள் வேகவிடவும்.
- அடுப்பை அணைத்துவிட்டு, வறுத்து வைத்துள்ள சுண்டைக்காயைச் சேர்த்து, அதன் மேல் சிறிது நல்லெண்ணெயை மற்றும் நெய்யை ஊற்றி கிளறி அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான ஐயங்கார் ஸ்டைல் கதம்ப சாதம் ரெடி. இதனை வறுத்த அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு பொரியலுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications