Latest Updates
-
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு!
2 கப் இட்லி மாவும், முட்டைக்கோஸும் இருக்கா? இந்த மாதிரி போண்டா செய்யுங்க.. சூப்பரா இருக்கும்..
Instant Bonda Recipe In Tamil: மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது உங்கள் வீட்டில் உள்ளோர் மொறுமொறுவென்று சாப்பிட கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் பஜ்ஜி மாவு எதுவும் இல்லையா? இட்லி மாவு உள்ளதா? அப்படியானால் அந்த இட்லி மாவைக் கொண்டு அட்டகாசமான சுவையில் போண்டாவை செய்யுங்கள்.
அதுவும் இந்த போண்டாவுடன் முட்டைக்கோஸை சேர்த்து செய்யும் போது இன்னும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த போண்டாவானது 10 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு இந்த இன்ஸ்டன்ட் போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இன்ஸ்டன்ட் போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* இட்லி மாவு - 2 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* கடலை மாவு - 1/4 கப்
* பச்சை மிளகாய் - 4-5 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* முட்டைக்கோஸ் - 1 கப் (துருவியது)
* கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் இட்லி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் அரிசி மாவு, கடலை மாவு, நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய
இஞ்சி, பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய முட்டைக்கோஸ்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிசைந்து
கொள்ள வேண்டும். முக்கியமாக நீர் சேர்த்துவிட வேண்டாம்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், கைகளை நீரில் நனைத்து, பிசைந்து வைத்துள்ள மாவை
சிறிது சிறிதாக எண்ணெயில் கிள்ளிப் போட்டு பொன்னிறமாக பொரித்து
எடுத்தால், சுவையான போண்டா தயார்.
குறிப்பு:
* போண்டாவை எண்ணெயில் பொரிக்கும் போது, மிதமான தீயில் வைத்து தான்
பொரிக்க வேண்டும்.
* போண்டாவின் சுவையை இன்னும் அதிகரிக்க விரும்பினால், சிறிது தேங்காயை
எடுத்து, அதை சிறு துண்டுகளாக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால்
போண்டாவின் சுவை அற்புதமாக இருக்கும்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications
