Latest Updates
-
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சுதந்திர தின ஸ்பெஷல்: பன்னீர் வெஜிடேபிள் குருமா
75 ஆவது சுதந்திர தின ஸ்பெஷலாக, நமது தேசிய கொடியில் உள்ள நிறங்களைக் கொண்ட கேரட், பட்டாணி மற்றும் பன்னீர் சேர்த்து குருமா செய்து உங்கள் வீட்டில் உள்ளோரை அசத்துங்கள்.
உங்கள் வீட்டில் சப்பாத்தி, தோசை செய்யும் போது, அதற்கு என்ன சைடு டிஷ் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் கேரட், பட்டாணி ஆகியவற்றுடன் பன்னீரை சேர்த்து ஒரு அட்டகாசமான குருமா செய்யுங்கள். இந்த குருமா மிகவும் சுவையாக இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த மாதிரி குருமா செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

அதுவும் இந்த வருடம் 75 ஆவது சுதந்திர தினம் வரப்போகிறது. இந்த சுதந்திர தின ஸ்பெஷலாக, நமது தேசிய கொடியில் உள்ள நிறங்களைக் கொண்ட கேரட், பட்டாணி மற்றும் பன்னீர் சேர்த்து குருமா செய்து உங்கள் வீட்டில் உள்ளோரை அசத்துங்கள். கீழே உங்களுக்காக பன்னீர் வெஜிடேபிள் குருமா எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 1/2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 2 (பொடியாக நறுக்கியது)
* பட்டாணி - 1 கையளவு
* இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* கிராம்பு - 2
* பட்டை - 1 துண்டு
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/2 கப்
* பச்சை மிளகாய் - 2
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* முந்திரி - 5
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
செய்முறை:
* முதலில் குக்கரில் கேரட் மற்றும் பட்டாணியைப் போட்டு சிறிது நீர் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே தவாவில் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, பின் தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் அரைப்பதற்கு கொடுத்துள்ள பிற பொருட்களையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 1/2 முதல் 3/4 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 3 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் குக்கரில் வேக வைத்துள்ள காய்கறிகள் மற்றும் பன்னீரை சேர்த்து, குறைவான தீயில் 5-7 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பன்னீர் வெஜிடேபிள் குருமா தயார்.
குறிப்பு:
* பன்னீரை வதக்காமலும் பயன்படுத்தலாம்.
* அரைக்கும் போது வேண்டுமானால், தக்காளியையும் சேர்த்து வதக்கி அரைத்துக் கொள்ளலாம்.
* ஃப்ளேவருக்கு வேண்டுமானால் ஒரு டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்துக் கொள்ளலாம்.
* இந்த குருமாவுடன் உருளைக்கிழங்கு, பீன் என எந்த காய்கறியையும் சேர்த்துக் கொள்ளலாம்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications