Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
இட்லி பொடியை ஒருவாட்டி இப்படி செஞ்சு பாருங்க.. இனி சட்னி, சாம்பார் கேட்கவே மாட்டாங்க..
Idli Podi Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் இட்லி பொடியை அதிகம் விரும்பி சாப்பிடுவார்களா? அதனால் எப்போதும் உங்கள் வீட்டில் இட்லி பொடி ஸ்டாக்கில் இருக்குமா? உங்கள் வீட்டில் இட்லி பொடியை எப்போதும் ஒரே சுவையில் தான் செய்வீர்களா? பொதுவாக இட்லி பொடியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் செய்வார்கள்.
ஆனால் நீங்கள் அடுத்தமுறை இட்லி பொடியை செய்வதாக இருந்தால், அதை சற்று வித்தியாசமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் வறுத்து அரையுங்கள். இப்படி இட்லி பொடியை செய்யும் போது, வீட்டில் உள்ளோர் இனிமேல் சட்னி, சாம்பாரே கேட்கமாட்டார்கள். அந்த அளவில் இந்த இட்லி பொடி ருசியாக இருக்கும்.

உங்களுக்கு இட்லி மிளகாய் பொடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இட்லி மிளகாய் பொடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வரமிளகாய் - 60
* உளுத்தம் பருப்பு - 1 கப்
* கடலைப் பருப்பு - 1/2 கப்
* கருப்பு எள்ளு - 2 டேபிள் ஸ்பூன்
* வெள்ளை எள்ளு - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காய கட்டி - சிறிய நெல்லிக்காய் அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 60 வரமிளகாயை
சேர்த்து நன்கு வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் உளுத்தம் பருப்பை
சேர்த்து நல்ல மணம் வந்து, லேசாக நிறம் மாற வறுத்து, தனியாக ஒரு
தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 கப் கடலைப் பருப்பை
சேர்த்து நன்கு வறுத்து, அதை வறுத்த உளுத்தம் பருப்புடன் சேர்த்து
குளிர வைக்க வேண்டும்.
* பிறகு அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் கருப்பு நிற
எள்ளு விதைகளை சேர்த்து வறுத்து, அதையும் பருப்புடன் சேர்த்து குளிர
வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் வெள்ளை எள்ளு விதைகளை சேர்த்து வறுத்து இறக்கி,
அதையும் வறுத்து வைத்துள்ள பருப்புடன் சேர்த்து குளிர வைக்க
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், நெல்லிக்காய் அளவு பெருங்காய கட்டியை சேர்த்து நன்கு
பொரிய விட வேண்டும்.
* பெருங்காயம் நன்கு பொரிந்ததும், அதில் வரமிளகாயை சேர்த்து 2 நிமிடம்
நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும். பின் வரமிளகாயின்
காம்புகளை நீக்கிவிட வேண்டும்.
* பின்பு ஈரப்பதமில்லாத மிக்சர் ஜாரில் வறுத்த வரமிளகாய் மற்றும்
பெருங்காயத்தை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் வறுத்து வைத்துள்ள பிற பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பையும் சேர்த்து, கொரகொரவென்று அரைத்தால், சுவையான இட்லி பொடி
தயார்.



Click it and Unblock the Notifications