Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
ஹைதராபாத் ஸ்டைல் சுண்டல் பிரியாணி ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க, சிக்கன் பிரியாணி மாதிரியே இருக்கும்
Hyderabadi Chana Dal Biryani Recipe in Tamil: மதியம் வழக்கமான சாப்பாடு செய்யாமல் டேஸ்டியான ஒரு புதிய உணவை சமைக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பிரியாணி என்றால் பிடிக்குமா? பிரியாணி என்றால் எப்போதும் சிக்கன், மட்டனில்தான் செய்ய வேண்டுமென்று அவசியமில்லை? சிம்பிளா சுண்டலை வைத்தும் அட்டகாசமான சுவையில் பிரியாணி செய்யலாம், அதுவும் ஹைதராபாத் ஸ்டைலில் செய்து வீட்டிலுள்ள அனைவரையும் அசத்தலாம்.

ஹைதராபாத் பிரியாணி என்றாலே பாஸ்மதி அரிசியில்தான் செய்யப்படும். இந்த சுண்டல் பிரியாணி சுவையானதாக இருப்பதோடு மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இந்த ஹைதராபாத் சுண்டல் பிரியாணி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, அசைவ பிரியாணியே தோற்றுப் போகும் அளவில் ருசியாக இருக்கும். முக்கியமாக இந்த பிரியாணி பேச்சுலர்கள் செய்யக்கூடிய வகையில் சுலபமாக இருக்கும்.
உங்களுக்கு ஹைதராபாத் சுண்டல் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹைதராபாத் சுண்டல்பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பாஸ்மதி அரிசி - 1 கப்
- தண்ணீர் - 6 கப்
- உப்பு - தேவையான அளவு
- இலவங்கப்பட்டை - 1
- கிராம்பு - 1
- ஏலக்காய் - 1
- பிரிஞ்சி இலை -1
மசாலா அரைக்க:
- சுண்டல் - 1/2 கப்
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- நெய் - 1 ஸ்பூன்
- இலவங்கப்பட்டை - 1
- கிராம்பு - 1
- ஏலக்காய் - 1
- பிரிஞ்சி இலை -1
- இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1 (மெல்லியதாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 1 (நீளவாக்கில் கீறியது)
- புதினா இலை - ஒரு கைப்பிடி
- மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
- தனியாத்தூள் - ஒன்றரை ஸ்பூன்
- தயிர் - 1/2 கப்
- எலுமிச்சைச் சாறு - 2 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1 (வறுக்க)
செய்முறை:
- பாஸ்மதி அரிசி மற்றும் கொண்டைக்கடலையை கழுவி, 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பெரிய வெங்காயத்தை நறுக்கி, பொன்னிறமாகும் வரை எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இதைத் தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் 6 கப் நீர் மற்றும் உப்பை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். அதில் முழு கரம் மசாலாப் பொருட்களைச் சேர்க்கவும்.
- ஊறவைத்த அரிசியிலிருந்து கூடுதல் நீரை வடித்துவிடவும். நீர் கொதித்து பொங்கி வரும்போது, அரிசியைச் சேர்த்து, மிதமான தீயில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை வேகவிடவும்.
- அரிசி 90 சதவீதம் வெந்த நிலையில் அதை அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். அதை ஆறவிடவும். அரிசியை வேகவைத்த அந்த நீரை தனியாக வைக்கவும்.
- அதே நீரில், ஊறவைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து, அது கெட்டியாகவும் மென்மையாகவும் வேகும் வரை சமைக்கவும். கூடுதல் நீரை வடித்துவிட்டு, வெந்த கொண்டைக்கடலையைத் தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய்யை ஒன்றாகச் சூடாக்கி, முழு கரம் மசாலாப் பொருட்களைச் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடி போன்ற பதம் வரும் வரை வதக்கவும். பின்னர் புதினா இலைகளைச் சேர்த்து, நன்றாகக் கலக்கவும்.
- பின்னர் மசாலாத் தூள்களையும் உப்பையும் ஒவ்வொன்றாகச் சேர்த்து, நன்றாகக் கிளறவும். இறுதியாகத் தயிரைச் சேர்த்து, மீண்டும் நன்றாகக் கிளறவும்.
- சமைத்து வைத்துள்ள கொண்டைக்கடலையைச் சேர்த்து, கிரேவி சற்று கெட்டியாகும் வரை நன்றாகக் கொதிக்கவிடவும்.
- கிரேவியில் போதிய அளவு நீர் இருப்பதையும், அது மிகவும் வறண்டுவிடாமல் இருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
- கிரேவி தயாரானதும், சமைத்த சாதத்தை அதன் மேல் பரப்பி, நறுக்கிய புதினா இலைகளைத் தூவவும்.
- பின்னர் மேலே வதக்கிய வெங்காயத்தைத் தூவி, சிறிதளவு எலுமிச்சைச் சாற்றைச் சேர்க்கவும். கடாயை ஒரு மூடியால் இறுக்கமாக மூடி, அடுப்பின் தீயைக் குறைத்து வைக்கவும். இதை 15 நிமிடங்களுக்கு 'தம்' போட்டு வேகவிடவும்.
- 15 நிமிடங்களுக்கு பின் அடுப்பிலிருந்து இறக்கி, ஒரு முட்கரண்டியால் பிரியாணியை மெதுவாகக் கிளறிவிடவும். அவ்வளவுதான் சூப்பரான ஹைதராபாத் சுண்டல் பிரியாணி ரெடி. இதை தயிர் வெங்காயத்துடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications