Latest Updates
-
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும்
சப்பாத்திக்கு பன்னீரை இனி இப்படி செய்யுங்க.. வீட்டுல இருக்குறவங்க 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Hyderabadi Paneer Masala: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீர் சைடு டிஷ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? எப்போதும் ஒரே மாதிரியான ஸ்டைலில் பன்னீரை செய்து கொடுப்பீர்களா?
இன்று அந்த பன்னீரை ஹைதராபாத் ஸ்டைலில் பன்னீர் மசாலா செய்து கொடுங்கள். இந்த ஹைதராபாத் பன்னீர் மசாலா சப்பாத்தி, நாண், புல்கா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு ஹைதராபாத் பன்னீர் மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹைதராபாத் பன்னீர் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 300 கிராம்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 3/4 கப் (பொடியாக நறுக்கியது)
* நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
* நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3-4 (நறுக்கியது)
* முந்திரி - 4-5
* தக்காளி - 2
* பசலைக்கீரை - 1 கையளவு
* கொத்தமல்லி - 3/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் + வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சுடுநீர் - 3/4 கப்
* கரம் மசாலா - 1/4 - 1/2 டீஸ்பூன்
* சர்க்கரை - 1 சிட்டிகை
* துருவிய பன்னீர் - 1/4 கப்
* ஹெவி க்ரீம் - 2-3 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* ஏலக்காய் - 3
* பிரியாணி இலை - 1
* கிராம்பு - 4
* பட்டை - 1/2 இன்ச்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 - 1 1/2 டேபிள்
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு
தூவி வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் தக்காளி மற்றும் முந்திரியை சேர்த்து நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பசலைக்கீரை, கொத்தமல்லி மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும்,
ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு, பட்டை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி 2 நிமிடம்
வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் தயிரை சேர்த்து கிளறி, 4-5 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள்
சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து, சிறிது நேரம் வேக வைக்க
வேண்டும்.
* பிறகு அதில் 3/4 கப் சுடுநீரை ஊற்றி, உப்பு சேர்த்து கிளறி கொதிக்க
வைக்க வேண்டும்.
* பின் அதில் கரம் மசாலா மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, பன்னீர்
துண்டுகளைப் போட்டு கிளறி, 3-4 நிமிடம் வேக வைத்து இறக்க
வேண்டும்.
* இறுதியாக மேலே துருவிய பன்னீர், ஹைவி க்ரீம் சேர்த்து கிளறினால்,
சுவையான ஹைதராபாத் பன்னீர் மசாலா தயார்.
Image Courtesy: yummyoyummy



Click it and Unblock the Notifications
