Latest Updates
-
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
தெலுங்கானா ஸ்பைசி சிக்கன் செய்ய தெரியுமா? இதோ ரெசிபி..!
Telangana Spicy Chicken Recipe: அசைவ உணவு என்றாலே நம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.. விடுமுறை நாட்களில் மீன், ஆடு, கோழி என அசைவ உணவுகளின் 2 அல்லது 3 வகைகளை வீட்டில் செய்து சாப்பிடுவோம்.. ஆனால், அனைவரும் சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல் என ஒரே ரெசிபியைதான் செய்வோம். அது ரொம்பவே போரடிச்சுடுச்சா? அப்போ வாங்க இந்த சண்டேவுக்கு ஏதாவது புதுசா ட்ரை பண்ணலாம்..
தெலுங்கானா ஸ்பைசி சிக்கன் ஃப்ரையை உங்க வீட்ல இந்த வாரம் வரும் சண்டேவுக்கு செஞ்சு அசத்துங்க.. இந்த தெலுங்கானா ஸ்பைசி சிக்கன் என்பது மிகக் குறைந்த எண்ணெயில் தயாரிக்கப்பட்ட அரை உலர்ந்த உணவு மற்றும் மசாலாவை கடாயில் போட்டு வறுக்கப்படுவது.. இது பாரம்பரியமாக தெலுங்கானா வீடுகளில் இன்றும் செய்யப்படுகிறது.. அதனால் நீங்களும் இதை இந்த சண்டே அன்னைக்கு செய்யுங்கள்.. சும்மா சுவை அள்ளும் .. இந்த ரெசிபியை எப்படி செய்வது? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

தேவையான பொருள்கள்
1. எலும்பில்லா சிக்கன்
2. வெங்காயம்
3. எண்ணெய்
4. உப்பு
5. கரம் மசாலா
6. தனியாத் தூள்
7. மிளகாய்த் தூள்
8. இஞ்சி/ பூண்டு விழுது
9. கொத்துமல்லி இலை
10. மஞ்சள் தூள்
செய்முறை
1. சிக்கனை முதலில் நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
2. பின்னர் வெங்காயத்தை உரித்து சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
3. ஒரு அடுப்பில் வாணலியை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் சிக்கனை அதில் போட்டு வதக்கவும்.
4. சிக்கன் சிறிது வதங்கியதும் உடன் மஞ்சள் தூள், இஞ்சிப் - பூண்டு விழுது ஆகிய இவை அனைத்தையும் போட்டு மேலும் சிறிது நேரம் நன்கு வதக்கவும்.
5. இப்போது சிக்கன் மேலும் பாதி வெந்த மாத்திரத்தில் அதில் மிளகாய்த் தூள், உப்பு ஆகிய இவற்றை போட்டு மீண்டும் நன்கு வதக்கவும்.
6. பின் சிறிது நேரம் மூடி வைக்கவும்.
7. பின்னர் மீண்டும் திறந்து ஏற்கனவே அரைத்து வைத்து இருக்கும் விழுதை அதில் போட்டு மேலும் நன்கு வதக்கவும்.
8. சிக்கன் இப்போது நன்கு வெந்த மாத்திரத்தில் அதில் தனியா தூள், கரம் மசாலா போட்டு சிறிது நேரம் நன்கு மூடி வைக்கவும். உடனுக்குடன் அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரத்தில் அணைத்து விடவும்.
9. பின்னர் தயாரான சிக்கனில் கொத்தமல்லி இலை தூவவும்.
10. இதோ இப்போது சுவையான தெலுங்கானா ஸ்பைசி சிக்கன் ப்ரை ரெடி.
சிக்கனில் கொழுப்புகள் குறைவாகவும், புரோட்டீன்கள் அதிகமாகவும் உள்ளன . எனவே பாடி பில்டர் போன்று தசைகள் வேண்டுமென்பவர்கள், சிக்கனை அதிகம் சாப்பிடலாம். ஆனால் சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்கள் இதை தவிர்க்கவும்..



Click it and Unblock the Notifications
