Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
குழந்தைகளுக்கு ஏற்ற லஞ்ச் பாக்ஸ் ரெசிபி.. கதம்ப சாதம் செய்வது எப்படி?
அனைத்து வைட்டமின்களும் அடங்கிய கதம்ப சாதத்தை வீட்டிலேயே 10 நிமிடத்தில் செய்யலாம். இது விட்டமின்கள் நிறைந்தது.. சாப்பிடுவதற்கு நல்லா டேஸ்டா இருக்கும். உடலுக்கும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.. பல்வாறு காய்கறிகளை வைத்து செய்யும் இந்த கதம்ப சாதத்தை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதனால் அவர்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள்..
குறிப்பாக பள்ளிக்கு செல்லும் போது லஞ்ச் பாக்ஸ்ல இந்த கதம்ப சாதத்தை வைத்துக் கொடுத்தால் உங்க குழந்தைகள் மிச்சம் வைக்காம சாப்பிட்டுவிடுவார்கள்.. அதுமட்டுமல்லாமல் அதில் இருக்கும் காய்கறிகளின் அனைத்து விட்டமின் சத்துகளும் அவர்களுக்கு கிடைக்கும்.. வாங்க இந்த பதிவில் ஈஸியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியான கதம்ப சாதம் செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்
1. அரிசி
2. துவரம் பருப்பு
3. உப்பு
4. புளி
5. முருங்கைக்காய்
6. கத்திரிக்காய்
7. கொத்தவரைக்காய்
8. அவரைக்காய் (பீன்ஸ், காரட் போன்றவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம்)
9. மஞ்சள் பொடி
10. சாம்பார் மிளகாய் பொடி
11. உளுத்தம் பருப்பு
12. நல்லெண்ணெய்
13. கடுகு
14. நெய்
15. கடலை பருப்பு
16. தேங்காய்
17. காய்ந்த மிளகாய்
18. கடலைப் பருப்பு
19. தனியா
20. நல்லெண்ணெய்
செய்முறை
1. முதலில் அரிசி, பருப்பு இவற்றை ஒன்றாக குக்கரில் வைத்து வேக வைக்கவும்.
2. காய்கறிகள் கத்தரி, முருங்கை போன்றவற்றை ஒரு முறை வாணலியில் அல்லது குக்கரில் சிறிது எண்ணை விட்டு வதக்கி அதனுடன் மற்ற காய்கறிகளும் சேர்த்து புளி கரைசல், மிளகாய் பொடி, உப்பு ஆகியவற்றைப் போட்டு கொதிக்க விடவும்.
3. காய்கறிகள் வெந்தவுடன் வெந்த சாத, பருப்பு கலவை, காய்கறிகள், எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கிளறவும்.
4. வறுத்து அரைத்த தேங்காய் மற்றும் மசால் பொடியையும் கடைசியாக போட்டு நன்றாகக் கிளறி, தாளித்து இறக்கவும்.
5. இதோ சுவையான கதம்ப சாதம் சுடச் சுட ரெடி.
6. காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் நீரிழிவு போன்ற நோய்களில் இருந்து கூட விடுபடலாம்.
சாதம் வைப்பது எப்படி?
குக்கரில் நடு விரல் முதல் ரேகை அளவுக்கு தண்ணீர் ஊற்றவும். அதற்கு மேல் தண்ணீர் ஊற்றினால் சாதம் குலைந்து விடும். பிறகு கனமான பாத்திரத்தை எடுத்து ஒரு ஆழாக்கு அரிசி போட்டு 2 ஆழாக்கு சுத்தமான நீர் ஊற்றி பாத்திரத்தை சரியான அளவு தட்டு போட்டு மூடி அடுப்பில் வைக்க வேண்டும்.. பின்னர் விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
1. சமையல் நன்றாக இருக்க முதல் தரமான அரிசியை எப்போதும் தேர்வு செய்யுங்கள்.
2. அதே போல, எப்போதுமே குக்கரில் அரிசி கழுவி போடும் போது, ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
3. பெரும்பாலும் சாம்பாருக்கு பருப்பு வைப்பது முதல் சாம்பாருக்கான காய்களை வேக வைப்பது உட்பட அனைத்தையும் அரிசியுடனேயே வைத்து குக்கரில் வேக வையுங்கள். இதனால் எரிபொருள் (காஸ்) மிச்சமாகும்.



Click it and Unblock the Notifications