Latest Updates
-
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு!
இட்லி, தோசைக்கு ஹோட்டல் ஸ்டைலில் தேங்காய் சட்னி மற்றும் கார சட்னியை எப்படி செய்யணும் தெரியுமா?
Hotel Style Coconut Chutney And Red Chutney Recipe: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் டிபனாக செய்யப் போகிறீர்களா? இந்த இட்லி தோசைக்கு பெரும்பாலும் உங்கள் வீட்டில் சட்னியைத் தான் செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான ஸ்டைலில் சட்னியை செய்து போரடித்துவிட்டதா?
உங்கள் வீட்டில் உள்ளோர் ஹோட்டல் சட்னியை விரும்பி சாப்பிடுவார்களா? நீங்களும் அப்படி ஹோட்டல் சுவையில் சட்னியை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் அடுத்தமுறை இட்லி, தோசைக்கு ஹோட்டல் ஸ்டைலில் தேங்காய் சட்னி அல்லது கார சட்னியை செய்யுங்கள்.

உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி மற்றும் கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி மற்றும் கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் சட்னிக்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 கப்
* கொத்தமல்லி - 1/2 கப்
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி - 1 இன்ச்
* புளி - ஒரு சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
கார சட்னிக்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* இஞ்சி - 2 இன்ச்
* பூண்டு - 1 பல்
* வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* வரமிளகாய் - 6
* துருவிய தேங்காய் - 1 கப்
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
தேங்காய் சட்னி...
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பொட்டுக்கடலை, வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுத்து
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அவற்றை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் தேங்காய், கொத்தமல்லி,
பச்சை மிளகாய், இஞ்சி, புளி, சுவைக்கேற்ப உப்பு சேத்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டு, தேவையான அளவு நீரை
ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானது,
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து
சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான ஹோட்டடல் ஸ்டைல் தேங்காய் சட்னி
தயார்.
கார சட்னி...
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் தக்காளி, வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், அதை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன்
தேங்காய், பொட்டுக்கடலை, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் கார
சட்னி தயார்.
Image Courtesy: seema



Click it and Unblock the Notifications
