Latest Updates
-
நீர் தோசையும், தண்ணி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கவலைகளும், தோல்வியும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா?
மொறுமொறுப்பான... கேஎஃப்சி சிக்கனை வீட்டிலேயே எப்படி செய்வது-ன்னு தெரியுமா?
பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய சிக்கனாக கேஎஃப்சி சிக்கன் உள்ளது. குறிப்பாக இந்த சிக்கனை குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் இந்த சிக்கனை கடைகளில் வாங்கி சாப்பிட வேண்டுமானால், அதற்கு குறைந்தது 500 ரூபாயாவது செலவழிக்க வேண்டும்.
ஆனால் இந்த சிக்கனை நாம் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். அதுவும் இந்த சிக்கனை வீட்டில் செய்தால், எவ்வளவு வேண்டுமானாலும் ஆசை தீர சாப்பிடலாம். சரி, இந்த கேஎஃப்சி சிக்கனை எப்படி வீட்டில் தயாரிப்பது என்று பலரும் கேட்கலாம்.

கீழே கேஎஃப்சி சிக்கனை வீட்டிலேயே எப்படி எளிய முறையில் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 500 கிராம் (பெரிய பெரிய துண்டுகளாக வெட்டிக்
கொள்ளவும்)
* மைதா - 1 கப்
* சோள மாவு - 1/2 கப்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
பிரட்டுவதற்கு...
* பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* உலர்ந்த தைம் இலை - 2 டீஸ்பூன்
* உலர்ந்த ஆரிகனோ - 2 டீஸ்பூன்
* உலர்ந்த துளசி - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - 2 டீஸ்பூன்
* சிக்கன் ஸ்டாக் பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்
* வெள்ளை மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
* கடுகுத் தூள் - 2 டீஸ்பூன்
ஊற வைப்பதற்கு...
* சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை - 1
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் சர்க்கரை,
உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் எலுமிச்சையின் தோலை அப்படியே போட்டு,
அதில் குளிர்ந்த நீரை சிக்கன் மூழ்கும் அளவில் ஊற்றி, ஃப்ரிட்ஜ்ஜில்
குறைந்தது 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு ஊறியதும், அதில் உள்ள நீரை வடிகட்டி
வெளியேற்றிவிட்டு, சிக்கன் துண்டுகளை மட்டும் தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு அகலமான தட்டில் மைதா, சோள மாவு, மசாலா பொடிகள்,
மூலிகைகள் மற்றும் பேக்கிங் பவுடரை சேர்த்து கிளறி, தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் நன்கு குளிர்ந்த ஐஸ் நீரை எடுத்துக் கொள்ள
வேண்டும். பின் அதில் ஒவ்வொரு சிக்கன் துண்டுகளைப் போட்டும் 7 நொடிகள்
வைத்து எடுத்து, பின் அதை மைதா கலவையில் போட்டு நன்கு கோட்டிங்
செய்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து
சிக்கன் துண்டுகளையும் செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு
தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் நன்கு
சூடானதும், சிக்கன் துண்டுகளைப் போட்டு 7 நிமிடம் மூடி வைத்து ப்ரை
செய்ய வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, சிக்கனை திருப்பி போட்டு, மீண்டும் மூடி
வைத்து 7 நிமிடம் வேக வைக்க வேண்டும். இதேப் போன்று மீண்டும்
திருப்பிப் போட்டு பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்தால், சுவையான
கேஎஃப்சி சிக்கன் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications