இட்லி, தோசைக்கு இந்த சட்னியை அரைச்சு சாப்பிடுங்க... மூட்டு வலி காணாம போயிடும்... ட்ரை பண்ணுங்க...!

Posted By:

Mudakathan Chutney Recipe in Tamil: எங்க தாத்தா பாட்டி எல்லாம் 90 வயசுளையும் உடல் ஆரோக்யத்தோட இருந்தாங்க. ஆனா இப்போவே படியேற முடியல, இப்போ 50 வயசுலயே முட்டிக்கால் வலிக்குது என புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அடுத்த தலைமுறையே 30 வயதிலேயே எங்களுக்கு முட்டி செத்து போச்சு என்கிறார்கள்.

ஆனால் தாத்தா பாட்டி உணவில் சேர்த்து கொண்டவற்றை நாம் மறந்தது தான் இதற்கு காரணம். அப்படி என்ன என்று கேட்கிறீர்களா? மூட்டுவலியை துரத்தும் முடக்கத்தான் கீரை தான். சரி வாங்க எப்படி முடக்கத்தான் கீரை துவையல் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.

Healthy Recipes Mudakathan Chutney Recipe How to Make Mudakathan Chutney

தேவையான பொருட்கள்:

- முடக்கத்தான் கீரை - ஒரு கட்டு
- புளி - சிறிது
- பூண்டு - 6 பல்
- சின்ன வெங்காயம் - 10 அல்லது 12
- காய்ந்த மிளகாய் - 5
- இஞ்சி - சிறு துண்டு
- சீரகம் - அரை தேக்கரண்டி
- மிளகு - அரை தேக்கரண்டி
- தேங்காய் - ½ மூடி
- உளுந்தம் பருப்பு - 1 டீ ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

- முடக்கத்தான் கீரையை மண் இல்லாம அலசி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.

- வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.

- வெங்காயத்தின் மேற்பரப்பில் கருப்பு நிற பூஞ்சை இருந்தால் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

- வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

- இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

- தேங்காயை உங்கள் விருப்பபடி துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து கொள்ளவும்.

- புளியை ஓடும் தண்ணீரில் ஓடு மற்றும் குப்பை இல்லாமல் அலசி எடுத்து வைத்து கொள்ளவும்.

- வாணலியை அடுப்பில் சூடானதும் சிறிதளவு எண்ணெய் சேர்க்கவும்.

- எண்ணெய் காய்ந்ததும் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து ஆற விடவும்.

- மீதம் இருக்கும் எண்ணெயில் முடக்கத்தான் கீரையை சேர்த்து நன்கு வதக்கி தனியாக எடுத்து கொள்ளவும்.

- அதே வாணலியில் மீதம் இருக்கும் எண்ணெயில் சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

- பின் கழுவி ஓடு நீக்கி வைத்த புளியை சேர்த்து நன்கு வறுக்கவும்.

- கடைசியாக துருவிய தேங்காய் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து ஆற வைக்கவும்.

- வறுத்து வைத்த பொருட்கள் நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

- பின் தேவையான அளவு தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து அரைத்து எடுத்தால் மூட்டு வலியை விரட்டும் முடக்கத்தான் துவையல் ரெடி!

[ of 5 - Users]
Story first published: Tuesday, July 8, 2025, 17:30 [IST]
Desktop Bottom Promotion