ஹயகிரீவா ரெசிபி /சென்னா தால் அல்வா ரெசிபி /ஹயகிரீவா மேடி ரெசிபி

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

ஹயகிரீவா ரெசிபி கர்நாடகவின் பாரம்பரிய ஸ்வீட்ஸ் ரெசிபி ஆகும். இந்த ரெசிபியை பூஜை மற்றும் பண்டிகை கொண்டாட்டத்தின் போது கடவுளுக்கு நைவேத்யமாக படைத்து வழிபடுவர். இந்த ஹயகிரீவா மேடி ரெசிபி கொண்டைக்கடலையை வெல்லப்பாகுடன் சேர்த்து தேங்காய் துருவல் மற்றும் உலர்ந்த பழங்களை போட்டு செய்யப்படும் ரெசிபி ஆகும்.

இந்த கூரண ரெசிபியை பூஜை கொண்டாட்டத்தின் போது கடவுளுக்கு படைத்து வழிபட்ட பிறகு எல்லாருக்கும் பிரசாதமாக கொடுத்து மகிழ்வர். சுவைக்காக இந்த ரெசிபியில் பாப்பி விதைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த சென்னா தால் அல்வா உங்களுக்கு வயிறு நிறைவை கொடுப்பதோடு உங்களுக்கு அருமையான சுவையையும் கொடுக்கும். இதன் இனிப்பு சுவை உங்கள் டேஸ்டியான நாக்கிற்கு கண்டிப்பாக விருந்தளிக்கும். இந்த எளிமையான ஹயகிரீவா ரெசிபியை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.

ஹயகிரீவா வீடியோ ரெசிபி

ஹயகிரீவா ரெசிபி
ஹயகிரீவா ரெசிபி /சென்னா தால் அல்வா ரெசிபி /கூரண ரெசிபி /ஹயகிரீவா மேடி ரெசிபி
Prep Time
30 நிமிடங்கள்
Cook Time
30 நிமிடங்கள்
Total Time
1 மணி நேரம் 10 நிமிடங்கள்

Recipe By: சுமா ஜெயந்த்

Recipe Type: ஸ்வீட்ஸ்

Serves: 4

Ingredients
 • கொண்டைக்கடலை - 1 கப்

  தண்ணீர் - 3 கப்

  வெல்லம் - 2 கப்

  பாப்பி விதைகள் - 11/2 டேபிள் ஸ்பூன்

  நெய் - 9 டேபிள் ஸ்பூன்

  உலர்ந்த திராட்சை - 2 டேபிள் ஸ்பூன்

  வறண்ட தேங்காய் துருவல் - 3/4 பெளல்

  உடைத்த முந்திரி பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

  கிராம்பு - 4-5

  ஏலக்காய் பொடி - 21/2 டேபிள் ஸ்பூன்

Red Rice Kanda Poha
How to Prepare
 • 1. ஒரு பெளலில் கொண்டைக்கடலையை எடுத்துக் கொள்ள வேண்டும்

  2. 2 கப் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

  3. ஊற வைத்த கொண்டைக்கடலையை ஒரு பிரஷர் குக்கரில் எடுத்து கொள்ளவும்

  4. இப்பொழுது 1/2 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

  5. 4-5 விசில் அடிக்கும் வரை கொண்டைக்கடலையை குக்கரில் வேக வைத்து காற்று போகும் வரை காத்திருக்க வேண்டும்.

  6. குக்கரின் மூடியை திறந்து கொண்டைக்கடலையை நசுக்கி வெந்துள்ளதா என்பதை பார்த்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

  7. அடுப்பில் கடாயை வைத்து சூடேற்றி வெல்லத்தை சேர்க்க வேண்டும்

  8. உடனடியாக 1/2 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.

  9. மிதமான தீயில் வெல்லம் முழுவதுமாக கரையும் வரை காத்திருந்து 5-7 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.

  10. வேக வைத்த கொண்டைக்கடலையை இந்த வெல்ல பாகுவில் சேர்க்க வேண்டும்.

  11. நன்றாக கலக்கவும்

  12. இப்பொழுது பாப்பி விதைகளை சேர்த்து கலக்கவும்

  13. 3 டேபிள் நெய் சேர்க்க வேண்டும்

  14. இப்பொழுது 15 நிமிடங்கள் சமைக்க வேண்டும்

  15. அப்புறம் உலர்ந்த பழங்கள் மற்றும் தேங்காய் துருவல் சேர்க்க வேண்டும்.

  16. மறுபடியும் ஒரு 5 டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும்

  17. இப்பொழுது இதை 2 நிமிடங்கள் சமைக்க வேண்டும்

  18. பிறகு மற்றொரு சின்ன கடாயை அடுப்பில் வைத்து 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்ற வேண்டும்

  19. உடைத்த முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும்

  20. பிறகு கிராம்பை சேர்க்கவும்

  21. வறுத்த முந்திரி பருப்பு கலவையை கொண்டைக்கடலை வெல்ல பாகுவில் சேர்க்கவும்.

  22. இப்பொழுது ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்

  23. சூடாக பரிமாறவும்

Instructions
 • 1.கொண்டைக்கடலையை ஊற வைக்கும் போதே மென்மையான பதத்திற்கு ஊற வைத்துக் கொண்டால் வேக வைக்க எளிதாக இருக்கும்.
 • 2.தேங்காய் துருவல் விருப்பத்திற்கு ஏற்ப சேர்க்கலாம் அல்லது சேர்க்காமலும் இருக்கலாம்.
 • 3.பாப்பி விதைகளும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்து கொள்ளலாம்.
Nutritional Information
 • பரிமாறும் அளவு - 1கப்
 • கலோரிகள் - 256.9 கலோரிகள்
 • கொழுப்பு - 11.4 கிராம்
 • புரோட்டீன் - 21.1 கிராம்
 • கார்போஹைட்ரேட் - 61 கிராம்
 • சுகர் - 24.8 கிராம்
 • நார்ச்சத்து - 6.2 கிராம்

செய்முறை படத்துடன் விளக்கம் :ஹயகிரீவா ரெசிபி செய்வது எப்படி

1. ஒரு பெளலில் கொண்டைக்கடலையை எடுத்துக் கொள்ள வேண்டும்

ஹயகிரீவா ரெசிபி

2. 2 கப் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

ஹயகிரீவா ரெசிபி
ஹயகிரீவா ரெசிபி

3. ஊற வைத்த கொண்டைக்கடலையை ஒரு பிரஷர் குக்கரில் எடுத்து கொள்ளவும்

ஹயகிரீவா ரெசிபி

4. இப்பொழுது 1/2 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

ஹயகிரீவா ரெசிபி

5. 4-5 விசில் அடிக்கும் வரை கொண்டைக்கடலையை குக்கரில் வேக வைத்து காற்று போகும் வரை காத்திருக்க வேண்டும்.

ஹயகிரீவா ரெசிபி
ஹயகிரீவா ரெசிபி

6. குக்கரின் மூடியை திறந்து கொண்டைக்கடலையை நசுக்கி வெந்துள்ளதா என்பதை பார்த்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

ஹயகிரீவா ரெசிபி

7. அடுப்பில் கடாயை வைத்து சூடேற்றி வெல்லத்தை சேர்க்க வேண்டும்

ஹயகிரீவா ரெசிபி

8. உடனடியாக 1/2 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.

ஹயகிரீவா ரெசிபி

9. மிதமான தீயில் வெல்லம் முழுவதுமாக கரையும் வரை காத்திருந்து 5-7 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.

ஹயகிரீவா ரெசிபி

10. வேக வைத்த கொண்டைக்கடலையை இந்த வெல்ல பாகுவில் சேர்க்க வேண்டும்.

ஹயகிரீவா ரெசிபி

11. நன்றாக கலக்கவும்

ஹயகிரீவா ரெசிபி

12. இப்பொழுது பாப்பி விதைகளை சேர்த்து கலக்கவும்

ஹயகிரீவா ரெசிபி

13. 3 டேபிள் நெய் சேர்க்க வேண்டும்

ஹயகிரீவா ரெசிபி

14. இப்பொழுது 15 நிமிடங்கள் சமைக்க வேண்டும்

ஹயகிரீவா ரெசிபி

15. அப்புறம் உலர்ந்த பழங்கள் மற்றும் தேங்காய் துருவல் சேர்க்க வேண்டும்.

ஹயகிரீவா ரெசிபி
ஹயகிரீவா ரெசிபி

16. மறுபடியும் ஒரு 5 டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும்

ஹயகிரீவா ரெசிபி
ஹயகிரீவா ரெசிபி

17. இப்பொழுது இதை 2 நிமிடங்கள் சமைக்க வேண்டும்

ஹயகிரீவா ரெசிபி

18. பிறகு மற்றொரு சின்ன கடாயை அடுப்பில் வைத்து 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்ற வேண்டும்

ஹயகிரீவா ரெசிபி

19. உடைத்த முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும்

ஹயகிரீவா ரெசிபி
ஹயகிரீவா ரெசிபி

20. பிறகு கிராம்பை சேர்க்கவும்

ஹயகிரீவா ரெசிபி

21. வறுத்த முந்திரி பருப்பு கலவையை கொண்டைக்கடலை வெல்ல பாகுவில் சேர்க்கவும்.

ஹயகிரீவா ரெசிபி

22. இப்பொழுது ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்

ஹயகிரீவா ரெசிபி
ஹயகிரீவா ரெசிபி

23. சூடாக பரிமாறவும்

ஹயகிரீவா ரெசிபி
ஹயகிரீவா ரெசிபி
[ 4.5 of 5 - 123 Users]
Story first published: Thursday, September 21, 2017, 15:00 [IST]